புதன், 2 மே, 2012

சண்டையிடும் பெற்றோரா நீங்கள்?

mohammed zubair 




 AN EXCELLENT ARTICLE
[ நாம் யாருமே மரணமின்றி நிலையாக இவ்வுலகில் வாழ்ந்துவிட போவதில்லை. அனைவருமே சில காலங்கள்தான் வாழப்போகிறோம். இருக்கும்போது அன்பு பாராட்டாமல் மறைந்தபின் சொல்லி அழுது என்ன பயன்? உயிரற்ற உடலோடு பேசி என்ன பயன்? போனவர் திரும்பி வரப்போவதில்லை. வாழ்நாள் முழுவதும் அந்த வடு மனதில் இருந்து கொண்டேயிருக்கும். அதுவும் பெற்றோர் - பிள்ளைகள் எனில் அதன் தாக்கம் சொல்லி புரிந்து கொள்ளமுடியாது. சரியாக யோசிக்காமல் தவறான முடிவு எடுத்துவிட்டு வாழ்க்கை முழுதும் வருந்தி என்ன பயன்?

பெற்றோர் சண்டையிடும் போது குழந்தைகள் முதலில் பயப்படுகின்றன. அவர்களுடைய ஆழ் மனதில் பாதுகாப்பற்ற உணர்வு எழுகிறது. இதனால் தான் பல குழந்தைகள் சண்டையின் போது அழுகின்றன. ஏதேதோ கத்துகின்றன. சத்தம் போடுகின்றன. இதனால் குழந்தைக்கு ஏற்படும் மன அழுத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் சண்டையில் பெற்றோரின் கோபம் குழந்தைகளின் மீது திரும்பி விட்டால் போச்சு. குழந்தைகள் கதிகலங்கி விடுகின்றன.
குழந்தைகளுக்கு 2 வயது பூர்த்தியானவுடன் பெற்றோர் மட்டுமின்றி மற்றவர்கள் பேசுவதையும் அவர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். இந்த வயது முதல் அவர்கள் பிரயோகிக்கும் வார்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கும். எனவே, குழந்தையின் முன்பாக பெற்றோர் கனிவான, மரியாதையான வார்த்தைகளை பேச வேண்டும். மாறாக, தம்பதிகள் சண்டையிடும் போது கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்தால் அதனை குழந்தைகளும் பேசத் துவங்கும்
]

நிமிடத்துக்கு நூறு எஸ்.எம்.எஸ் கள் அனுப்பித் திரியும் காதலர்கள் கூட திருமணத்துக்குப் பின் பாம்பும் கீரியுமாகிவிடுகிறார்கள். சிரிப்பும், சில்மிஷமுமாய் நடக்கும் இவர்களின் திருமண வாழ்க்கை கனவுகளின் பல்லக்கில் சில மாதங்கள் ஓடும். அவ்வளவு தான். திடீரென ஒரு நாள் யூ டர்ன் அடித்துத் திரும்பும் வண்டி போல திசை மாறி நிற்கும். ''மேட் ஃபார் ஈச் அதர்'' போல அசத்தலாய் சில மாதம் ஓடிய வாழ்க்கை எப்படி சட்டென உடைந்து வீழ்கிறது?

எவரஸ்டின் உச்சியில் கட்டி வைக்கும் எதிர்பார்ப்புக் கூடு கலைவது தான் பெரும்பாலான சிக்கல்களின் துவக்கம். காதல் காலத்தில் அடித்துத் தள்ளும் எஸ்.எம்.எஸ் களும், வாங்கிக் குவிக்கும் பரிசுகளும், சிரிப்புகளும், சீண்டலும் திருமணத்துக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாய்க் காய்ந்து போகிறது. அது தான் பெரும்பாலான பிரச்சினைகளின் ஊற்றுக் கண். தான் வேண்டா விருந்தாளியாகி விட்டோமோ எனும் பதட்டம் தம்பதியரிடையே எழுகிறது. அந்த நினைப்பே எரிச்சல், கோபம், மன அழுத்தம் என உருமாறி உருமாறி ஆளை விடுங்க சாமி எனும் நிலைக்குத் தள்ளி விடுகிறது.

திருமணத்தின் முதல் ஏழு வருடங்களைச் சந்தோஷமாகக் கடப்பதில் இருக்கிறது குடும்ப வாழ்வின் அஸ்திவாரம். அதிலும் குறிப்பாக முதல் இரண்டு வருடங்களைக் கடப்பது பலருக்கு சிம்ம சொப்பனம்! திருமணத்தின் முதல் ஏழு வருட காலத்தை ஆங்கிலத்தில் செவன் இயர் இட்ச்
(Seven year itch) என அழைக்கிறார்கள். இல்லாத பிரச்சினைகளெல்லாம் இந்த ஏழு வருட காலத்தில் வரும். டைவர்ஸ் புள்ளி விவரங்கள் இந்த காலகட்டத்தில் தான் எகிறும்.
இந்த ஏழு வருடப் புயலை சாதுர்யமாகவும், அன்புடனும் கடந்தால் காத்திருக்கிறது அமைதியான வாழ்க்கை.
இதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தார் அமெரிக்காவின் பேராசிரியர் ட்டெட் ஹட்சன் (Ted Huston) என்பவர். இவர் மனித உறவுகள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தியவர்.

ஏன் மக்கள் திருமணம் முடிந்த கையோடு டைவர்ஸும் கேட்கிறார்கள் என்பது தான் அவரை அலட்டிய கேள்வி. அவர் கண்டு பிடித்த பதில்கள் சுவாரஸ்யமானவை. அவருடைய பட்டியலில் டைவர்ஸ் வாங்குபவர்கள் யார் தெரியுமா ? திருமணம் முடிந்த துவக்கத்தில் உல்லாசமாய் சினிமா காதலர்கள் போல சுற்றுபவர்கள்.
''தான் தான் எல்லாம்'' என நினைப்பவர்கள். விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பவர்கள். இவர்கள் தான். டைவர்சின் முக்கியமான காரணம் உண்மையான ஆழமான அன்பு இல்லாதது தான். கருத்து வேற்றுமைகள், பதவி பணம், இத்யாதி சங்கதிகள் எல்லாம் கிடையாது என்கிறார் இவர். திருமணமாகி முதலிலேயே குழந்தையையும் பெற்றுக் கொள்பவர்களுக்கு விஷயம் இடியாப்பச் சிக்கலாகிவிடுகிறது. குழந்தைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஒரே கூரைக்குள் எலியும், பூனையுமாய் வாழ வேண்டும். அல்லது எண்ணையும், நெருப்புமாக பற்றிக் கொண்டே திரியவேண்டும். இந்த சண்டையில் அதிகம் காயப்படுவது அப்பாவா, அம்மாவா என பட்டிமன்றம் நடத்தினால், முடிவு குழந்தைகள் என்று தான் வரும். ''அது பச்சைக் குழந்தை தானே'' என்றோ, அல்லது அது வளர்ந்த குழந்தை புரிந்து கொள்ளும் என்றோ பெற்றோர் தப்புக் கணக்கு போடுகிறார்கள். உண்மையில் சின்னக் குழந்தையானாலும் சரி, கல்லூரிக்குச் செல்லும் குழந்தையானாலும் சரி. பாதிப்புகள் நிச்சயம் உண்டு. குழந்தைகள் பெற்றோரின் பிரதிபலிப்புகள். பெற்றோரின் சொல்லும், செயலும் தான் குழந்தைகளைக் கட்டியெழுப்புகின்றன. வீட்டில் சதா சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள் ? சண்டையிடலாம் தப்பில்லை என்பதையா? அல்லது குடும்பம் என்றால் சண்டை போட்டுத் தான் வாழவேண்டும் என்பதையா ? எதுவானாலும் அது சரியான வழிமுறையல்ல என்பது தானே உண்மை.
பெற்றோர் சண்டையிடும் போது குழந்தைகள் முதலில் பயப்படுகின்றன. அவர்களுடைய ஆழ் மனதில் பாதுகாப்பற்ற உணர்வு எழுகிறது. இதனால் தான் பல குழந்தைகள் சண்டையின் போது அழுகின்றன. ஏதேதோ கத்துகின்றன. சத்தம் போடுகின்றன. இதனால் குழந்தைக்கு ஏற்படும் மன அழுத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் சண்டையில் பெற்றோரின் கோபம் குழந்தைகளின் மீது திரும்பி விட்டால் போச்சு. குழந்தைகள் கதிகலங்கி விடுகின்றன.
குழந்தைகள் இதனால் பல தவறான பாடங்களைக் கற்கிறது. அப்பாவிடம் நல்ல பெயர் வாங்க அம்மாவைத் திட்டினால் போதும் என நினைக்கிறது. இதனால் அப்பாவைப் பற்றி அம்மாவிடமும், அம்மாவைப் பற்றி அப்பாவிடமும் கதைகள் ஒப்பிக்கிறது. அவர்களுடைய நோக்கம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சண்டை மூட்டுவதல்ல. பெற்றோரின் அரவணைப்பு மட்டுமே. அது சாதாரணமாய் கிடைக்காத போது ஏதேதோ செய்து அதை அடைய முயல்கின்றன.
பெற்றோரின் சண்டையில் குழந்தைகளை இழுக்கவே கூடாது. பல பெற்றோர் தங்கள் குடுமிப் பிடி சண்டையில் குழந்தையை நடுவராக்க முயல்வார்கள். இது குழந்தைகளின் மன அழுத்தத்தை ரொம்பவே அதிகரிக்கும். பெற்றோரிடம் பாகுபாடு காட்டாத சூழலை குழந்தைகளுக்குத் தர வேண்டும். அதை விடுத்து குழந்தைகளையே இக்கட்டான சூழலில் தள்ளி விடக் கூடாது.
பெற்றோரின் சண்டை குழந்தைகளை உளவியல் ரீதியாகவும் பாதிக்கும் என்கிறார் டாக்டர். மார்க் கம்மிங்ஸ். இவர் உளவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் இந்தியானாவிலுள்ள நவ்டர் டீம் (Notre Dame) பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் இதைக் கண்டறிந்திருக்கிறார். இவருடைய ஆய்வு முடிவு சிந்திக்க வைக்கிறது. பெற்றோர்களிடையே கருத்து வேறுபாடோ, விவாதங்களோ வருவது குழந்தையின் மனதை பாதிப்பதில்லை. ஆனால் அந்த விவாதங்கள் முற்றுப் பெறாமல் போவது தான் குழந்தைகளை பாதிக்கிறது. தீர்வற்ற சண்டைகள் அவர்களை மன அழுத்தத்தில் தள்ளுகின்றன என்கிறார் அவர். மனம் சார்ந்த சிக்கல்களைத் தொடர்ந்து, தலைவலி, வயிற்று வலி என உடல் சார்ந்த நோய்களும் குழந்தைகளை வந்தடைகின்றன. அப்போதும் சில பெற்றோர் சும்மா இருப்பதில்லை. 'குழந்தையை ஒழுக்கா கவனிக்காம உனக்கென்ன பெரிய வேலை'' என அப்பா கத்துவார். ''குழந்தையை பெக்கறது தான் அம்மா வேலை, வளக்கிறது அப்பா வேலை'' என அம்மா கத்துவார். முடிவில் அங்கும் ஒரு பெரிய சண்டையே மல்லுக் கட்டும்.சில குடும்பங்களில்

''
நான் தான் செய்வேன்'' எனும் சண்டை பாதி நேரம் ஓடும். ''நீ செய்ய வேண்டியது தானே'' எனும் சண்டை மீதி நேரம் ஓடும். நாம் செய்வோம் என ஒன்று படாததால் குழந்தையின் சிந்தனையும் இரண்டாய் உடைந்து தொங்கும். எனவே தம்பதியரின் அன்யோன்யம் குழந்தை வளர்ச்சியின் அஸ்திவாரம் என்கிறார் கனடாவின் குழந்தைகள் நல நிபுணர் கேரி டைரன்பில் (Gary Direnfeld).தங்கள் சண்டையில் சிதைந்து போவது தனது செல்லக் குழந்தை எனும் உண்மையை பெற்றோர் உணர வேண்டும். ''தான் செய்வதெல்லாம் சரி'' யென நிறுவுவதும், அடுத்தவரை தரக்குறைவாய் பேசுவதும், அவமானப்படுத்துவதும், அடிப்பதும் கடைசியில் குழந்தையைத்தான் பாதிக்கிறது. ஒருவேளை திருமணங்கள் டைவர்ஸில் முடிந்து விட்டால் சொல்லவே வேண்டாம். குழந்தை நொறுங்கி விடுகிறது. பெற்றோர் குழந்தையை வளர்க்க பொருளாதாரம் இருக்கிறதா என்று தான் பார்ப்பார்கள். குழந்தையின் ஏக்கமும் தவிப்பும் அவர்களுக்கு பல நேரங்களில் தெரிவதே இல்லை.
கருத்து வேறுபாடு வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என குழந்தைக்குக் கற்றுக் கொடுப்பதாய் இருக்க வேண்டும் உங்கள் நடவடிக்கை! முடிவில்லாமல் ஒரு சண்டை இருக்கவே கூடாது. விவாதித்து, பேசி, கடைசியில் உடன்பாடாகி சந்தோசமாய் ஒரு விவாதம் முடிவுக்கு வரவேண்டும். அது உண்மையில் குழந்தைக்கு வழிகாட்டும் என்கிறார் உளவியலார் பிராட் சாச் (Brad Sachs).

இல்லங்களில் ஏனிந்த சண்டைகள்.....!
''எங்க அப்பவுக்கும் எனக்கும் பயங்கர சண்டை''; ''எங்க அம்மா என்ன சொன்னாலும் புரிஞ்சிகவே மாட்டேன் என்கிறார்கள். நல்லா கத்திட்டு வந்துவிட்டேன்.'' இந்த மாதிரியான விசயங்களை நாம் ஒருமுறையாவது கேட்டிருப்போம்; இது போன்ற சூழ்நிலையையும் தாண்டி வந்திருப்போம். இது வளர்ந்த பிள்ளைகள் உள்ள வீடுகளில் பெரும்பாலும் நடக்கும் ஒன்று. ஏன் இப்படி? என் முன்னே பலமுறை வந்துசெல்லும் ஒரு கேள்வி இது.
பிள்ளைகள் பதின்ம வயது அடையும்போது அவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்க்கும் இடையே இவ்வாறான கருத்துவேறுபாடுகள் ஆரம்பிக்கும். அப்போது தொடங்குவது ஒருவித வயதுகோளாறினால் என்று சொல்லலாம். ஆனால் அதற்கு பின்பும் இந்தவித பிரச்சனைகள் வராமல் இல்லை.
தலைமுறை இடைவெளியின் காரணமாக கருத்து வேறுபாடுகள் கண்டிப்பாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் அதனை சம்பந்தப்பட்டோர் நேருக்கு நேர் பேசிக்கொண்டால் எப்படியும் தீர்த்துக்கொள்ளலாம். அதனை விடுத்து அவரவர்களும் தங்கள் கருத்திலேயே விடாப்பிடியாக நின்றுகொண்டிருந்தால் பிரச்சனை தீராமல் சண்டையில்தான் முடியும்.
பல இல்லங்களில் இதுமாதிரியான சூழல் நீடிக்கிறது. இதன் காரணமாக உறவுமுறைகளில் ஒருவித இடைவெளி ஏற்பட்டுவிடும். ஒரு சில நேரங்களில் ''நான் சொன்னால் உன் பிள்ளை கேட்கமாட்டான்(ள்), நீயே கூறிவிடு'' என பெற்றோரும், ''நான் என் அம்மாவிடம்தான் / அப்பாவிடம்தான் எதையுமே கூறுவேன், மற்றவரிடம் கூறினால் சண்டைதான் வரும்'' என பிள்ளைகளும் ஒரு வட்டத்திற்குள் சிக்கிவிடுகிறார்கள்.
இப்போது இருக்கும் தனிக்குடித்தின முறையில் வீட்டில் இருப்பதே அதிகபட்சமாக நான்கு பேர்தான்; அதனில்லும் குழுக்களாகி போய்கொண்டேயிருந்தால் எங்கே செல்கிறோம் என்றே புரியவில்லை. இருக்கும் சிறு வட்டத்திற்க்குள் இன்னுமொரு குறுகிய வட்டம். விசாலமாகவேண்டிய மனம் ஏனோ குறுகிகொண்டே போகின்றது. இதன் விளைவு மிகவும் அபாயகரமானதாக இருக்கும். அனைவருக்குமே மற்றவரை குறைகூறுதல் மிகவும் எளிது. ஆனால் இன்று குறைகூறும் பிள்ளைகள் தங்களுக்கு ஒரு பிள்ளை பிறந்து அவர்கள் அந்த பெற்றோருடன் சண்டையிடும் போதுதான் பெற்றோரின் வலி தெரியும். பிள்ளைகளாய் பெற்றோர் மீது பழி சுமத்தலாம்; சண்டையிடலாம்; பேச்சினையும், உறவினையுமே முறித்துக்கொள்ளலாம். இளமை செருக்கினால் இதனை செய்கிறார்கள்.
வாழ்க்கை ஒரு சக்கரம் என்பதை அவர்கள் அப்போது புரிந்துகொள்வதில்லை. அந்த பிள்ளைகளும் பெற்றோராகி அவர்தம் பிள்ளைகள் அவ்வாறு நடக்கும் சமயத்தில், தாங்கள் செய்த பிழையை எண்ணி வருத்தப்படலாம். ஆனால் அதனை சரிசெய்து அன்பு பாராட்ட அவர்தம் பெற்றோர் இருப்பார்களா என்பது சந்தேகமே.
காலம் வெகுவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சுயநலத்தாலும் வரட்டு பிடிவாதத்தினாலும் உறவுகளை இழப்பது வாழ்க்கையின் அர்த்தத்தை இழப்பது போன்றது. ஆறரிவு பெற்ற மனிதராக பிறந்துவிட்டு இவ்வாறான தவறை செய்வது முறையே இல்லை.

நாம் யாருமே மரணமின்றி நிலையாக இவ்வுலகில் வாழ்ந்துவிட போவதில்லை. அனைவருமே சில காலங்கள்தான் வாழப்போகிறோம். இருக்கும்போது அன்பு பாராட்டாமல் மறைந்தபின் சொல்லி அழுது என்ன பயன்? உயிரற்ற உடலோடு பேசி என்ன பயன்? போனவர் திரும்பி வரப்போவதில்லை. வாழ்நாள் முழுவதும் அந்த வடு மனதில் இருந்து கொண்டேயிருக்கும். அதுவும் பெற்றோர்
- பிள்ளைகள் எனில் அதன் தாக்கம் சொல்லி புரிந்து கொள்ளமுடியாது. சரியாக யோசிக்காமல் தவறான முடிவு எடுத்துவிட்டு வாழ்க்கை முழுதும் வருந்தி என்ன பயன்? கருத்து வேறுபாடுகள் இல்லாமல் குடும்ப வாழ்க்கை இருக்கப் போவதில்லை. ஆனால் அதை எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது வாழ்வின் வெற்றியும் தோல்வியும். சண்டையே போடாமல் இருக்க முடியாது. அதுவும் ஆபத்தானதே. அடக்கி வைக்கப்படும் கோபம் நோய்களாகத் தலை நீட்டும். ஆனால் சண்டையைத் திறமையாகக் கையாளவேண்டும்.
நம்மோடு இருப்பவர்களோடு மனம்விட்டு பேசுவோம். எதையுமே ஒருவித நடுநிலையோடு யோசிப்போம். நம் கருத்தில் நியாயம் இருப்பின் அதனை சரியான முறையில் மற்றவர்களுக்கு புரிய வைப்போம். புரிய வைப்பதிலும், புரிந்து கொள்ளுதலிலும்தான் வாழ்க்கையின் நிலையான மகிழ்ச்சி உள்ளது. விரோதம் தவிர்த்து அன்பு பாராட்டுவதில்தான் வாழ்வின் அர்த்தம் அடங்கியுள்ளது. இந்த உண்மையைத் தம்பதியர் புரிந்து கொண்டால் வாழ்வில் சிக்கலே இல்லை. வாழ்க்கை வாழ்வதற்கே. இந்த தரணியில் இருக்கும்வரை நம் வாழ்வை நல்லவிதமாக வாழ்வோம்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக