398. நபியும் ரசூலும் ஒன்றே!
398. நபியும் ரசூலும் ஒன்றே!
இவ்வசனத்தில் (22:52) நாம் அனுப்பிய எந்த நபியானாலும், எந்தத் தூதரானாலும் . என்ற சொற்றொடர் இடம் பெறுகின்றது. நபியும் ரசூலும் ஒன்றல்ல; வெவ்வேறானவை எனக் கூறுவோர் இதை ஆதாரமாகக் காட்டுவார்கள்.
இரண்டும் ஒன்று தான் என்பதற்குரிய சான்றுகளை, பொருள் அட்டவணையில் நபிமார்கள் என்ற தலைப்பில் எடுத்துக் காட்டியுள்ளோம். எனவே அவற்றுக்கு முரணில்லாத வகையில் தான் இதை விளங்க வேண்டும்.
இதை அப்படியே பொருள் கொண்டு, நபி வேறு; ரசூல் வேறு எனக் கூறினால் அதற்கு மாற்றமாக அமைந்த ஏராளமான வசனங்களை நிராகரிக்கும் நிலைமை ஏற்படும்.
மனிதர்களின் பேச்சு வழக்கில் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு சொற்களைப் பயன்படுத்தி, தனித்தனி பொருள் போன்று கூறும் வழக்கம் உள்ளது. குறிப்பாக எதிர் மறையாகப் பேசும் போது அது அதிக அளவில் காணப்படுகிறது. அரபு மொழி உட்பட இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த வழக்கம் உள்ளது.
எனக்கு எந்தக் கூட்டாளியும், நண்பனும் வேண்டாம்.
எனக்கு எந்தச் சொந்தமும் இல்லை; பந்தமும் இல்லை என்பன போன்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம். அதிக அழுத்தம் கொடுப்பதற்காக ஒரே கருத்தில் அமைந்த இரு சொற்களை, இரு கருத்துக்களைப் போல் பயன் படுத்துகிறோம். அது போல் மேற்கண்ட வசனத்தைப் புரிந்து கொண்டால் நபியும் ரசூலும் ஒன்றே எனக் கூறும் வசனங் களுடன் பொருந்திப் போகின்றது.
11.07.2009. 06:46
0 கருத்துகள்:
கருத்துரையிடுக