புதன், 2 மே, 2012

அல் ஹகீகா-Alhakeekah-part 1




mohammed zubair siraji
அரபியில்: அல்லாமா மௌலானா அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்)
தமிழில்: மௌலானா மௌலவி அஸ்ஸஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்)
முகவுரை

بسم الله الر حمن الرّحيم. الحمدلله ربّ العالمين والصلوه واسّلام علي الم  علي المظهر الاتم سيّدنا محمّد و علي آله واصحابه واتباعه اجمعين.
அற்புத ஞானி, ஆன்மீக வள்ளல், ஆரிபீன்களின் இமாம், வாயிழீன்களின் சுல்தான், மஜ்தூபுகளின் தலைவர், மெய்ஞ்ஞான சமுத்திரம், ஹஜ்ரத் மௌலானா மௌலவி அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபிய்யில் காதிரிய்யில் ஹைதராபாதிய்யி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்) அவர்களின் அதியற்புத ஞான பொக்கிஷங்களான அரிய நூல்களில் சிலதை ஹக்கை மறைத்து பாத்திலை நிலைப்படுத்த எத்தனித்த அக்கிரமக்காரர்கள் மீது 'தர்க்கம்' என்னும் வாளைக் கொண்டு அடர்ந்தேறி, அவர்களை திசையறியாது, திகைத்தோட வைத்த மெய்ஞ்ஞானக் குருநாதர், எங்கள் ஷெய்கு மௌலானா மௌலவி ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபிய்யில் காதிரிய்யிஸ் ஸித்தீக்கிய்யி (காஹிரி) (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்) அவர்கள் மொழிபெயர்த்து ஞானத்தேட்டமுள்ள மக்களுக்காக வெளியிட்டார்கள்.
அந்த வரிசையில் அவரது எண்ணத்தில் உறைந்து கிடந்த, அவர்களது வாழ்நாளில் செய்து முடிக்காமல் போன 'அல் ஹகீகா' எனும் இந்த அரிய ஞானப் பொக்கிஷ நூலை நான் மொழிபெயர்த்து எம் ஷெய்குவின்' ஆசையைப் பூர்த்தி செய்து அன்னாருக்கு இதை காணிக்கையாக ஆக்குவோம் என்னும் நோக்கத்தின் பேரில் பலமுறை எத்தனித்தும் பல்வகை வேலைப்பளுக்களால் அது கைகூடாமற் போயிற்று.
இருப்பினும் ஸ்ரீலங்காவிலுள்ள 'அக்கரைப் பற்று' எனும் கிராமத்தில் இவ்வெண்ணம் நிறைவேற அல்லாஹுத்தஆலா நாடி இருந்தான் போலும். அது அந்த இடத்திலேயே நிறைவேறிற்று.
ஹிஜ்ரி 1419, றமழான் 6ம் நாள் (26-12-1998) அக்கறைப்பற்று ஸூபி மன்ஸிலில் இந்த மொழிபெயர்ப்பை, அல்லாஹுத்தஆலாவின் பக்கம் பரஞ்சாட்டியவனாகவும், சங்கைமிகு ஷெய்குமார்களின் நல்லுதவியை நாடியவனாகவும் இவ்வேலையை அங்கு ஆரம்பித்து ஹிஜ்ரி 1420, முஹர்ரம் 11ம் நாள் (28-04-1999) இல் இவ்வேலையை செவ்வனே நிறைவேற்றினேன். அல்ஹம்துலில்லாஹ்.
இதை எழுதுவதற்கு என்னோடு முழுமூச்சாக ஒத்துழைத்த சோதரர் ஏ.எம். அ    ஹ்மத் (எனக்கும், அவருக்கும் இர்பானுடைய இல்மையும் சகல பாக்கியத்தையும் நல்குவானாக) அவர்களுக்கும் இதற்கு எல்லா வகையிலும் உதவி, ஒத்தாசை நல்கிய அக்கறைப்பற்று ஹிஸ்புல்லாஹ் சபையினருக்கும் எனது நன்றியையும், துஅவையும் சேர்ப்பிக்கிறேன்.
ஷெய்குமார்களுக்கெல்லாம் பெரும் ஷெய்கான மெய்ஞ்ஞானப் பெருங்கடல் முஹிய்யத்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு(அவரைத்  தொட்டு எங்களையும் பொருத்தமாக்கி வைப்பானாக) அவர்களின் இரு கவிகளுக்கு விளக்கவுரையாக அமைந்த இந்த அரும் பொக்கிஷம், ஞான தேட்டமுடைய எல்லா முஹிப்பீன்களுக்கும் பெரிதும் உதவும் என நம்புகின்றேன்.
என்றாலும், இயன்றவரை இதை இலகு தமிழில் மொழி பெயர்த்தாலும், குறிக்கப்பட்ட சில சொற்களையும், வாக்கியங்களையும் அவ்வாறே அதற்குரிய பாணியில் மொழிபெயர்த்தது எங்கள் மெய்ஞ்ஞான சொரூபர், ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்) அவர்களுக்கு கடப்பு செய்யாமல் இருப்பதற்காகவும், இலகு தமிழில் திருப்புகின்ற பொழுது ஏற்படுகின்ற வழுக்களையும், கருத்துச் சரிவுகளையும் பற்றி அச்சமுற்றதற்காகவும், நான் அவ்வாறே அவ்வாக்கியங்களை அறபியிலும், தமிழிலும் கொடுத்திருக்கின்றேன்.
இந்நூலை வாசித்து இதிலுள்ள விளக்கங்களை உள்ளாளுள்ளபடி ஓரணுப்பிரமாணமாவது கருத்துப் பிசகாது விளங்கி ஞானப்பாட்டையில் சித்தி பெறவும், பலமுறை வாசித்தும் தெளிவு ஏற்படாவிடத்து, ஞானத்தேர்ச்சியுள்ளவர்களிடமும், அதன் அந்தரங்கம் தெரிந்தவர்களிடமும் சென்று அதன் குறி கருத்தை விளங்கியறியவும், எல்லா முரீதீன்களையும், முஹிப்பீன்களையும் நான் வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். ஏனெனில் அல்லாஹு தஆலா அவனது சங்கையான கிதாபில்…,

فاسلوا ا هل الذّكر ان كنتم لاتعلمون
நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் இறை தியானச் சிந்தையுடைய அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வீர்களாக என்று கூறியதற்கமைய.
நான் இவ்வாறு சொல்லக் காரணம், ஞானம் எனும் போர்வையில் ஞானத்தை பொதுமக்களின் மத்தியில் சொல்லக்கூடியவர்கள், செய்யிதுல் அன்பியாவான எங்கள் தலைவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பரமார்த்திக(தஸவ்வுப்) ஞானம் பற்றி எதைக் கூறினார்களோ அதற்கு முற்றிலும் மாறான கருத்தையும் விளக்கத்தையும் கொடுத்து தானும் 'குப்று' எனும் குழியில் வீழ்ந்து, மற்றவர்களையும் அக்குழியில் விழுத்தாட்டும் நிலையை நான் இப்போது அறிந்து வருகின்றேன். இதற்காக வேண்டித்தான் இந்த விடயத்தில் மிக்க கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க எமது எல்லா முரீதீன்களையும், முஹிப்பீன்களையும் வற்புறுத்துகின்றேன்.
கண்டபடியான ஞானவிளக்கங்களையும், தன் எண்ணத்தில் தோன்றிய சுய விளக்கத்தையும், இவ்வரிய நூல் சார்பாக சொல்வதும், விளக்குவதும், மற்றவர்களிடமும் திணிப்பதும் 'குப்றும்' குற்றமுமாகும் என்பதை மீண்டும் நான் உங்களுக்கு வற்புறுத்துகின்றேன்.
இதுபோன்று ஏனைய பல நூற்களை மொழிபெயர்க்கவும், எழுதவும் அல்லாஹ் எமக்கு நல்லருள் பாலிப்பானாக.
و اخردعوناان الحمد لله ربّ العالمين
இவ்வண்ணம்,
காதிமுல் கௌமு(சமூக ஊழியன்)
செய்யிது முஹம்மத் ஜலாலுத்தீன்
(பூக்கோயாத் தங்கள்)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
அல் ஹகீகா
சர்வ புகழும் தாத்தில் ஒருவனானவனும் சுஊனாத் எனும் உடைகளில் பலதானவனுமாகிய அல்லாஹ்வுக்கே ஆகும். சலாத்தும் சலாமும் அல்லாஹ்வின் கலிமாக்கள் அனைத்தையும் ஒருங்கே சேகரித்துக்கொண்ட ஒரு கலிமாவான எங்கள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரிலும் அவர்கள் அல்லாஹ்வின் அஸ்மாக்கள் அனைத்தையும் கொண்டு நஃது சொல்லப்பட்டவரும் சிபாத்துக்கள் அனைத்தையும் கொண்டு வர்ணிக்கப்பட்டவருமாவார். – இன்னும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள்- அவர்கள் குர்ஆனின் சூசகமானதும் தெளிவானதுமான எல்லா வாக்கியங்களைக் கொண்டும் ஈமான் கொண்டவர்கள்- பேரிலும் ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக.
அம்மா பஃது
பலவீனமானவனும் நேர்வழிக்காட்டக் கூடிய அல்லாஹ்வின் பக்கம் தேவையானவனுமான அடியான் முஹம்மத் அப்துல் காதிர் (ஹைதராபாதி) – அழகான கைகளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சங்கைப்படுத்தி வைப்பானாக! அவர் சொல்லுகிறார்.
நான் மக்களின் தலைவரான நபிநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத்திலிருந்து 1344 ஆம் ஆண்டு மெட்ராஸ் நகரில் தங்கியிருந்த போது அந்த நகரைச் சேர்ந்த ஒரு சாலிஹான மனிதர், பெரும் ஷெய்குமார்களுக்கெல்லாம் ஷெய்கான முஹிய்யத்தீன் இப்னு அரபி – என் தாய், தந்தை, றூஹூ, கல்பு என்பனவற்றை அவர்களுக்காக அர்ப்பணம் செய்கிறேன். அவரைத் தொட்டும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! என்னைத் தொட்டும் அவரை பொருத்தமாக்கி வைப்பானாக!
அவர்களின் இரண்டு கவிகளுக்கு விரிவுரை செய்யும்படி என்னை வேண்டிக் கொண்டார். அந்த இரண்டு கவிகளிலுமுள்ள பிசகுதல் எனும் சந்தேகத்தை உயர்த்துவதற்காகவும், மனித நெஞ்சங்களில் உண்டாகக் கூடிய எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் வஸ்வாஸை தட்டுவதற்காகவும், மேற்படி கவிகளுக்கு விரிவுரை செய்வதை என்னிடம் வேண்டிக் கொண்டார்.
நான் இந்த விசயத்தில் சரக்கு குறைவானவனாக இருக்கிற நிலைமையிலும், ஆரம்ப காலத்திலிருந்தே எழுதுவதற்கு சடைவானவனாக இருக்கிற நிலைமையிலும், கிருபையாளனான சிறப்பானவனான அல்லாஹ்வின் பக்கம் பரஞ்சாட்டியவனாக அவருக்கு நான் விடையளித்தேன். எல்லா வஸ்துவின் ஆரம்பம், அவனிலிருந்தும் மீளுதல் அவன் பக்கம் ஆகும். இன்னும் ஆசை முறிவதைத் தொட்டும், நத்துதல் கெடுவதை விட்டும், தன் நப்ஸின் பேரில் அதிர் கடந்தவன் ஒவ்வொருவருக்கும் அவன் ரஹ்மத்தைக் கொண்டு பயம் காட்டுகிறவன் நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்கில் துரிதமானவனும், அதாபு செய்வதில் கடினமானவனுமாவான்.
இந்த விடையான விரிவுரைக்கு 'அல்ஹகீகா' என்று பெயர் வைத்தேன். என்னுடைய இரண்டு நூல்களான 'அல் ஹக்கு' என்ற பெயரைத் தொடர்ந்ததற்காகவும், இன்னும் இதைத் தேடுபவனுக்கு கோப்பை கோப்பையாக அள்ளிக் கொடுப்பதனாலேயும் 'அல் ஹகீகா' என்று பெயர் வைத்தேன்.
நான் மன்னிப்பையும், தயவையும் தவறைத் திருத்துவதையும் ஜெயம் பெற்ற நல்லடியார்களிடமிருந்து ஆசிக்கிறேன்.(ஆதரவு வைக்கிறேன்) இதனோடு இணைந்து விளங்கிய பின்னர்,ஒரு வித்து பழம் உடையதும், நீண்ட நிழல்கள் உடையதுமான மரமாக ஆகாது. அந்த வித்து அழிந்ததன் பிறகே ஒழிய, அது  போன்று ஒரு மனிதன் அழிந்த பிறகே அவனுடைய தகுதி அறியப்படுகிறது.
அறிந்து கொள்! பேனா, கடுதாசி எழுதும் நான் எல்லாம் இருக்க நான் ரஹ்மானுடைய சமூகத்திலிருந்து நல்லுதவியைத் தேடுகிறேன். அந்த ரஹ்மான் குர்ஆனையும், அதன் பயானையும் கற்றுத் தந்தவன். அவன் என் நம்பிக்கைக்கும், ஆதரவுக்கும் உடையவன். எனதும் மக்களினதும் றப்புமாவான்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
انّماالكون خيال فهو حق في الحقيقة
كلّ من يفهم هذا حاز اسرار الطريقة
'நிச்சயமாக கௌன்களாகிறது (படைப்பினங்கள் அனைத்தும்) கற்பனையானதாகும். உள்ளமையில் அவனே, ஹக்கானவனாகும்.
'இதை விளங்கக் கூடிய ஒவ்வொருவரும் தரீக்கத்தின் இரகசியத்தை பொதிந்து கொண்டார்.'

விரிவுரை:
தாத்தைக் கொண்டு வெளியில் அறியப்படாமல் பார்க்கப்படக் கூடிய வஸ்த்துக்கள் அனைத்தும் கற்பனையாகும்.
கண்ணாடியில் பதிந்த கோலம் போல,
தாகித்தவர் தண்ணீர் என்று எண்ணுகின்ற கானல் நீரைப் போல்.
உலகம் என்பது நிச்சயமாக அது கற்பனையானதாகும். சுயமே வெளியில் அதிலிருந்து ஒரு வஸ்துவும் அறியப்படமாட்டாது. என்றாலும் அது வெளியில் அறவே அறியப்படாத காணும் கானல் நீரைப்போல.
ஹகீகத்தில் மவ்ஜூதான பொருள் ஹக்கான ஒருவனான அல்லாஹ்வின் உஜூதைத் தவிர வேறொன்றும் இல்லை.
இந்தப் பொதுப்படையின் விரிவுரையாகிறது:-
'நிச்சயமாக உண்டான பொருள் அது இல்லாததாகாது.'
'இல்லாத பொருள் அறியப்படவும் மாட்டாது'. அவ்வாறில்லையாயின் ஹகீகத்து புரள்வது நிர்பந்தமாகும்.
இத்துடனே, நிச்சயமாக உலகத்திலுள்ள அணுக்களில் நின்றுமுள்ள ஒவ்வொரு அணுவும் உண்டாகிறது, அழிகிறது என்று எல்லாக் கணமும் நான் எளிதாகக் காண்கிறோம்.
இதிலிருந்து நாம் விளங்குகிறோம் அந்த அணுக்கள் உண்மையில் அது சுயமாக உண்டானதாக ஆகவில்லை. எமது கற்பனையான பார்வையில் ஹகீகிய்யான (حقيقي) அசலிய்யானاصلي ) உஜூதில்லாமல் பார்க்கப்படக்கூடியதாக ஆகியிருந்தது. உண்மையில் அது இல்லாமலானதாகவும், பேதபுத்தியிலும்  வஹ்மிலும் (وهم) , கற்பனையிலும் (خيال )(கியாலிலும்) உண்டானதாகவும் ஆகியிருந்தது. அது வஹ்மில் அழியும், வஹ்மில் நிலைக்கும். உண்மையில் அதற்கு அழிவும் இல்லை. நிலையும் இல்லை.
ஒரு வஸ்த்து அறியப்படவில்லையானால் எப்பபடி அழியும்? அந்த வஸ்த்து உஜூதின் வாடையைக் கூட நுகரவில்லை.
உலகத்திலுள்ள அணுக்களிலிருந்தும் ஒரு அணுவையும் அது இல்லாமலானதன் பிறகு நீ உண்டானதாக அறிந்துக் கொள்ள மாட்டாய். ஏனெனில், நிச்சயமாக நீ அறிவாய், ஹகீகத்து புரள்வது அசம்பாவிதம் ஆகும்.
எப்படி இல்லாத ஒன்று அறியப்படும். அல்லது உள்ள பொருள் எப்படி இல்லாமல் ஆகும்.
அறிந்து கொள் சோதரா! அல்லாஹ் உன்னைப் பக்குவப்படுத்துவானாக! ஆலத்துடைய மவ்ஜூதாத்துகளிலிருந்து நீர் பார்க்கக் கூடிய அனைத்தும் தனித்த இல்லாமையிலிருந்து வரவும் இல்லை. அதிலிருந்து உண்டாகவும் இல்லை. என்றாலும் அது உஜூதின் நிலைகளிலிருந்தும், சுற்றுகளிலிருந்தும் உன்னுடைய திஹ்னில்(உள்ளத்தில்) பிடித்தெடுக்கப்பட்டவைகளாகும்.
இந்த வஹ்மிய்யான உஜூது உண்டாகும் இடமாகிறது உஜூதின் நிலைகளிலிருந்து ஒரு நிலையாகும். அதற்கு அறவே வெளியில் உஜூது இல்லை. என்றாலும் அது அவனுடைய பூரணமான குத்ரத்தைக் கொண்டும் ஆச்சரியமான ஹிக்மத்தைக் கொண்டும் உன்னுடைய திஹ்னிலும், அக்லிலும் மவ்ஜூதானதாகும். அவனுடைய ஷஃன் ரெம்ப மேலானதாகும்.
உலகமானது அக்லியான மவ்ஜூதாகும். ஹக்குடைய உஜூதிலிருந்து உண்டானதுமாகும். வெளிப்புலனைக் கொண்டு அதை அறிந்து கொள்ளவும் மாட்டாய். அதை அறிந்து கொள்வதெல்லாம் அக்லியும், கியாலிய்யான புலனிலும்தான்.
வெளிப்புலனைக் கொண்டு அறியப்பட்டவைகளாகிறது நிச்சயமாக அது ஹகீகியான உஜூதுடைய சுற்றுகளாகும். அது அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. இதற்காகத்தான் ஷெய்குல் அக்பர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,

العالم معقول والحق محسوس
ஆலம் அக்லினால் விளங்கப்பட்டதாகும். ஹக்கு புலனறிவால் அறியப்பட்டதாகும்.
வஹ்மினுடையதும், கியாலினுடையதுமான ஹகீகத்தை விளக்குவதற்கு சில உதாரணங்கள் சொல்லப் போகிறேன்.
உதாரணம் 1:
சோதரா நீ அறியவில்லையா? ஐஸ் என்பது தண்ணீரின் ஐனேயாகும்(தானாகும்). உன்னுடைய நம்பிக்கையான அறிவுடன் அது தண்ணீர் என்று நீ அறிந்திருக்கின்றாய். அந்த உறைந்த கோலம் அக்லுடைய முகத்தில் ஐஸ் வேறானது என்ற திரையை போட்டு விட்டது. அந்நேரம் நீ தண்ணீரைக் காண மாட்டாய். நீ ஐஸ் தண்ணீர்தான் என்று எண்ணவும் மாட்டாய். என்றாலும் அதை நீ தண்ணீர் அல்லாத இன்னொரு  பொருளாக ஆக்கிக் கொண்டாய். அதற்கு ஐஸ் என்று பெயரும் வைத்தாய். ஐஸ் என்ற கோலத்திற்கு தண்ணீரின் அதறுக்கும் குணபாடுக்கும் ஹுக்முக்கும், தீர்ப்புக்கும் வேறான, அதற்கென்று சொந்தமான அதறும், ஹுக்மும் (குணபாடும், தீர்ப்பும்) உண்டு.
ஐஸின் அதறாகிறது கடும் குளிராகும். உறைந்த கோலமாகிறது அதனுடைய தாத்தாகும். இதற்காகவே இரண்டு தாத்துக்களிடையேயும், இரண்டு அதறுக்கிடையேயும் நீ பிரித்தாய். ஆனால் இங்கே ஒரே ஒரு தாத்தை தவிர வேறில்லை. அது தண்ணீராகும்.
ஐஸ் என்னும் உறைந்த கோலமாகிறது, அதில் ஒரு வஸ்த்துவைச் சேர்க்காமலும், ஒரு வஸ்த்துவை அதிகரிக்காமலும் தண்ணீரின் நிலையிலிருந்து ஒரு நிலையும் சுற்றிலிருந்து ஒரு சுற்றுமாகும்.என்றாலும் உன்னுடைய திஹ்னு அதிலிருந்து ஐஸின் தாத்தை தண்ணீரின் தாத்தை விட்டும் வேறு பிரிந்ததாக பிடித்தெடுக்கிறது. ஐஸின் பேரில் அது உண்டான வஸ்துவென்று உனது திஹ்ன் தீர்ப்பளிக்கிறது. ஆகவே ஐஸ் உண்டான பொருளாகும் என்று நீர் சொல்கிறாய். இங்கு ஐஸ் சுயமே உண்டான பொருள் அல்ல. என்றாலும் அதற்கு பிடித்தெடுக்கப்பட்ட ஒரு உஜூது உண்டு. வஹ்மிய்யான தரிபடுதலும் கற்பனையில் தஹ்கீகும் (உண்மையாக்குதல்) உண்டு. இவை அனைத்தும் உனது திஹ்னில்தான் உண்டாகிறது.
தனித்த உஜூது இல்லாத வஸ்து அடங்கலும் அது உஜூதை இன்னொன்றிலிருந்து எடுத்துக் கொள்கிறது. தனித்த இல்லாமையிலிருந்து அது அறியப்படவில்லை. என்றாலும் அதற்கு பிடித்தெடுக்கப்பட்ட அக்லியான உஜூது உண்டு. இப்படி பிடித்தெடுக்கப்பட்ட உஜூதாகிறது சூபிகளான ஷெய்குமார்களின் பரிபாஷையில்' கற்பனையும் மாயையும் ஆகும். ஹகீகத்திலும், சுயத்திலும் அதற்கு உஜூது இல்லை. அழிவும் இல்லை. என்றாலும் பனாவும் (அழிவும்), பகாவும்(நிலையும்) அது உஜூதாகிற(உண்டாகிற) இடத்தில் உண்டாகிறது. அவ்விடம் வஹ்மும் கியாலும் ஆகும்.
பனாவும், பகாவும் உண்டாவதற்கு உஜூது தேவை என்பது அறிவாளிக்கு மறையாது. ஒரு வஸ்து அறவே வெளியில் மவ்ஜூதாகவில்லையானால் அதன்பேரில் எப்படி பனாவும் பகாவும் ஏற்படும்? (ஏற்படாது)
ஐஸின் தாத்தும், அதன் குணபாடும், அதன் அழிவும் அதன் நிலையும் அதன் இல்லாமையும், அதன் உள்ளமையும் இவை அடங்கலும் அதன்பேரில் சேர்ப்பது கொண்டு வஹ்மும் கியாலுமாகும்.
இவ்விசயங்களை தண்ணீரின் பக்கம் சேர்த்துப் பார்ப்பது கொண்டு அது அதன் சுற்றுகளும் நிலைகளுமாகும். 'சில நேரம் வெளியாகும். சில நேரம் மறையும்'. நீ நாடினால் 'வெளியாகிறது உள்ளாகிறது' என்று கூறுவாய். இங்கு ஹகீகிய்யான உஜூதும் இல்லை. ஹகீகிய்யான அதமும் இல்லை என்றாலும் அந்த இரண்டும் (உண்டாகுதலும்;, அழிதலும்;) அது இளாபிய்யாகும் .اضافي அதாவது ஒன்றோடு ஒன்று சேர்த்துப் பார்ப்பது கொண்டு உண்டானதாகும்.
தண்ணீரின் நிலையிலிருந்து ஒரு நிலை வெளியானால் நிச்சயமாக அது மவ்ஜூதானது போல் ஆகிவிட்டது. இது மறைந்திருந்ததின் பேரில் சேர்ப்பது கொண்டு.
அது மறைந்தால் (அதனுடைய அசலுக்கு அது திரும்பி மறைந்து விட்டால்) அது இளாபிய்யான இல்லாத விசயமாக ஆகிவிட்டது. அதாவது அது வெளியான நிலையை சேர்த்துப் பார்ப்பது கொண்டு இல்லாததாகிவிட்டது. ஹகீகத்தில் அதற்கு உஜூதும் அதமும் இல்லை. நீ காணவில்லையா? நிச்சயமாக ஐஸாகிறது சூட்டைக் கொண்டு உருகுமானால் தண்ணீராக மாறி அதன் அசலுக்குத் திரும்பி விடும். அதாவது தண்ணீராகும். தண்ணீரின் நிறையானது ஐஸாவதற்கு முன் எந்த அளவாய் இருந்ததோ அதே அளவினதாய் இருக்கும். இப்பொழுதும் அது எப்படி இருந்ததோ அப்படி இருக்கும். (முன்பிருந்த மாதிரி)
எந்த வஸ்த்து இங்கு அழிந்தது அல்லது இல்லாமலானது? எந்த வஸ்துவின் பேரில் இல்லாமையும் அழிவும் உண்டானது?
சோதரா அறிந்து கொள்!
ஐஸானது உனது வஹ்மில் உண்டாயிருந்தது போல, அதற்கு அழிவும் வஹ்மில் உண்டானது. வெளியில் அல்ல. இவ்விடத்தில் தண்ணீரின் உஜூதும் அதன் நிலையுமே அன்றி வேறொன்றும் உண்டாகவில்லை. ஆகவே நீ ஐஸை அறவே பெற்றுக் கொள்ளவும் இல்லை, அது அறவே அழியவும் இல்லை..
மேலான அல்லாஹுத்தஆலாவின் புகழைக் கொண்டு தரிபட்டு விட்டது. அதாவது நிச்சயமாக ஐஸின் உஜூதும் அதமுமாகிறது அவை இரண்டும் பிடித்தெடுக்கப்பட்ட வஹ்மியானதாக ஆகிவிட்டது. ஹகீகத்திலும் சுயத்திலும் இல்லை.
உதாரணம் 2
நீ அறிந்திருக்கிறாய். மோதிரத்தின் கோலமாகிறது தங்கத்தின் கோலம் அல்லாததாகும். வெளியில் அது தங்கத்தின் ஐனாக இருப்பதுடன், மோதிரம் என்னும் கோலம் அது வெளியாவதற்கு முன் தங்கத்தின் தாத்தில் மறைந்திருந்தது. அது வெளியானதன் பின் மோதிரம் என்னும் பெயர் உண்டானது.
மோதிரம் என்பது தங்கத்தின் நிலைகளிலிருந்து ஒரு நிலையே அல்லாதில்லை. சுற்றிலிருந்து ஒரு சுற்றல்லாதில்லை. நீ தற்போது ஐஸின் உதாரணத்தில் அறிந்தது போல 'அல் ஹாத்திமு மஃகூல் அல் தஹக் மஹ்ஸூஸ்  الخاتم معقول الذهب محسوسஆகும்.
மோதிரம் என்னும் கோலமாகிறது அது இல்லாமல் ஆகவும் செய்யும். அறியப்படவும் செய்யும். அழியும் பொருளொன்றும் ஹகீகத்தில் மவ்ஜூதானதாக ஆகாது. என்றாலும் அதை அறியப்படுவதெல்லாம் வஹ்மிலும், கியாலிலும்தான். அதின்பேரில் அதமும், உஜூதும் உண்டாகிறதும் கியாலில்தான் வெளியில் அல்ல. அது ஹகீகத்தில் இல்லாமலாக்கப்பட்டதாக ஆகவில்லை. அது தங்கத்தின் உள்ளில் மறைந்திருப்பதாக வேண்டியாகும். இப்பொழுது بالقوة பில்குவ்வா(மறைந்துள்ள சக்தி) உண்டாகும் தன்மையிலிருந்து  بالفعا பில் பிஃலு(சக்தியின் செயல்பாடு) தற்பொழுதுக்கு வெளியாகிவிட்டது. மறைவிலிருந்து வெளிக்கு வெளியாகிவிட்டது.
பின்பு அந்த மோதிரத்தின் கோலம் அழிந்துவிட்டால் நீ அது இல்லாமலாகிவிட்டது என்று எண்ணாதே. என்றாலும் அது அஸலுக்கு திரும்பிவிட்டது. இன்னும் பில்பிஃலிலிருந்து பில்குவ்வாவிற்கு திரும்பிவிட்டது.
உதாரணம் 3
சோதரா! உன்னுடைய உடைகளைப் பார். அதன் பெயர்களின் எண்ணிக்கையைப் பார். அது வஸ்து அல்லாதில்லை. அதற்கு ஒரே ஒரு பெயரே தவிர இல்லை. அது துணியாகும். தொப்பி, சட்டை, ஜுப்பா, மேலங்கி, தலைப்பாகை, போர்வை, துண்டு, சிறுவால் இவை அல்லாத்தது போல. இவைகள் அதிகமாக இருப்பதுடன் அது ஒரு துணியைத் தவிர வேறில்லை. பல சுற்றுகளும் பல நிலைகளும் உடைய துணியைத் தவிர வேறில்லை. இங்கு துணி அல்லாத ஒரு வஸ்த்துவும் இல்லை. நீ அதன் கோலங்களைப் பார்ப்பாயானால் அவைகளுக்கிடையில் வேறு பிரித்தறிவாயானால் நீ அது பலது என்பது  கொண்டு உறுதி கொள்கிறாய். நீ பன்மையைப் பார்க்கிறாய்.
அந்த கோலங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளை விட்டும் உனது பார்வையைத் துண்டித்தால் அது உண்டாகும் இடத்தின் பக்கம் நீ முகம் வைக்கிறதை ஆக்கினால், அது எதிலிருந்து பிடித்தெடுக்கப்பட்டதோ, அந்த இடத்தின் உன் பார்வையை ஆக்கினால், ஒரேயொரு பொருளை நீ காணுவாய். அது துணியாகும்.இந்த நேரத்தில் நீ ஒருமையைக் காணுகிறாய். உனது ஹிக்மத்தை ஒருங்கு குவித்து அதன் கோலங்களையும் துணி என்னும் ஹகீகத்தையும் ஒரே பார்வையில் பார்ப்பாயானால் நீ இரண்டு கண்ணுடையவனாகிறாய். அதாவது ஒரு பார்வையில் ஒருமையையும், பன்மையையும் நீ காணுகிறாய்.காமிலான , முகம்மலான முஹக்கிகீன்களில் நின்றும் நீ ஆகிவிடுகிறாய். அல்லாஹுதஆலா இந்த வண்ணமான மர்தபாவை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டினால், எங்களுக்கும், உனக்கும் தந்தருள்வானாக!
சோதரா! உன்னுடைய உடைகள் அது எண்ணிக்கையானதுடனும், பலதானதுடனும் ஒரே ஒரு வஸ்துவில்லாமலில்லை. அது துணியாகும். இங்கு உண்டான பொருள் ஒரு துணியைத் தவிர வேறில்லை.
தொப்பி, சட்டை, ஜுப்பா…… இவைகள் அனைத்தும் வஹ்மிலும், கியாலிலுமே ஒழிய அது அறியப்படவும் மாட்டாது. அழியவும் மாட்டாது. இதற்குப் பிறகு உனது பார்வையை கூர்மையாக்குவாயானால் மீண்டும் துணியையும் அறவே ஹகீக்கத்தில் சுயமாக உண்டானதாக அறிந்து கொள்ள மாட்டாய் உன்னுடைய வஹ்மிலும் கியாலிலுமே ஒழிய. என்றாலும் அதை வெளியில் கலப்பற்ற معدوم மஃதூமாக அறிந்து கொள்வாய்.
எடுத்துக்காட்டுமிடத்தில், நீ அறியவில்லையா, உனக்குத் தெரியாதா சோதரா! நிச்சயமாக துணிக்கு ஹகீகத்திய்யான ஒரு ஹகீகத்து இல்லை.(உண்மையான உள்ளமை அதற்கில்லை) அதற்கு சுயமான உஜூதும் இல்லை. என்றாலும் அதனுடைய உஜூது கியாலிலும், வஹ்மிலும் பிடித்தெடுக்கப்பட்டவையும்,
ஹகீகத்திலே துணி என்பது தனித்த நூலாகும். நூலில் சிலதை சிலதோடு நெய்தல் என்னும் வழியில் சேர்ப்பது கொண்டு வஹ்மிலும், கியாலிலும் உண்டான கோலமே துணி என்ற கோலமாகும்.
நெய்ததன் பிறகு எமது திஹ்னில் அதற்கென்று ஓர் குறிப்பான கோலம் உண்டாகிவிட்டது. அதற்கு நாம் துணி எனறு பெயர் வைததோம். நெய்தல் என்னும் ஒரு குறிப்பான வழியின் பேரில் சில சிலதோடு சேர்க்ப்பட்ட நூலே தவிர வெளியில் மவ்ஜூதான பொருள் இல்லை. துணி என்பது அறவே வெளியில் அறியப்பட்டதான பொருள் இல்லை. துணி என்பது அறவே வெளியில் அறியப்படாது என்றாலும் வெளியில் உண்டான பொருள் அந்த துணியின் எதிரில் (முன்னிலையில்) சிலதை சிலதோடு சேர்க்கப்பட்ட நூலே ஆகும். அந்த நூல் அல்லாத்த ஒரு வஸ்துவும் அங்கில்லை. அதனுடைய நெய்தல் பிரியுமானால் துணியின் கோலம் அழிந்து விடும். நூல் அழியவில்லை. அது இல்லாமலாகவும் இல்லை. என்றாலும் அது உண்டாக்கப்பட்ட பொருளாகும். அது நெய்வதற்கு முன்னாலும் அது துணி எனும் கோலத்தில் வெளியாவதற்கு முன்னாலும் உண்டாயிருந்தது போல.
எனவே துணியாகிறது அது உண்டாகவும் இல்லை. இல்லாமலாகவும் இல்லை வஹ்மிலேயே ஒழிய. அந்த துணிக்கு ஒரு காலத்திலும் வெளியான உஜூது அதற்கு உண்டாயிருக்கவில்லை. வெளியில் உண்டாவது என்ற வாடையைக் கூட அறவே அது நுகரவில்லை.
இதன்பேரில் நூலின் கோலத்தையும் ஒழுங்கு பிடித்துக் கொள். அந்த நூல், நூல் எனும் கோலத்தில் வெளியான பஞ்சேயல்லாதில்லை. அந்த நூல் பஞ்சுடைய ஹகீகத்திலும், தாத்திலும் மறைந்து பில் குவ்வாவில் இருந்ததன் பிறகு தற்பொழுது நூலின் கோலத்தில் வெளியாகிவிட்டது என்ற அர்த்தத்தில் பஞ்சு, நூல் எனும் கோலத்தில் வெளியான பஞ்சேயல்லாதில்லை. ஆகவே நூல் மறைவிலிருந்து வெளிக்கு வந்து விட்டது.
நூல் எனும் கோலமாகிறது பஞ்சின் நிலையிலிருந்து ஒரு நிலையும் சுற்றிலிருந்து ஒரு சுற்றுமே அல்லாதில்லை. இங்கு பஞ்சின் உஜூதின் ஐனே தவிர வேறு உஜூது இல்லை. மொத்தத்தில், நூல் பஞ்சின் ஐனானது போல, துணியும் பஞ்சின் ஐனாகும். இது போல சாரம், சட்டை, தலைப்பாகை போன்றவனவெல்லாம் துணியிலிருந்து வெளியான கோலங்களும், வெளியாகும் கோலங்களும் பஞ்சின் ஐனே ஆகும். கலப்பற்ற அதின் சுற்றுகளுமாகும். பஞ்சுடைய ஹகீகத்தின் பேரில் அதிகமான ஒரு விசயம் அங்கில்லை. அது குறிப்பாவதிலும் அது எண்ணிக்கையாவதிலும். அதன்பேரில் ஒரு வஸ்த்துவை சேர்க்கப்படவுமில்லை. ஒரு வஸ்த்துவை குறைக்கப்படவுமில்லை. அது பஞ்சே ஆகும். பஞ்சின் உள்ளமையாகிறது தாத்தில் ஒன்றானதாகும்.
அதனுடைய சுற்றுகள் கொண்டும், குறிப்பாவது  கொண்டும் அதில் மறைந்திருக்கும் கமாலாத்துகள் வெளிப்படுவது கொண்டும் அது பலதானதாகும். அதனுடைய சுற்றுகள் அதிகமாக இருப்பதுடன் அது தாத்தில் ஒன்றானதாகும். அது பலதாகவும் இல்லை. குறையவும் இல்லை. அதிகமாகவும் இல்லை.
பஞ்சின் ஹகீகத்தின் நிலை இந்த விசயத்தில் இவ்வாறிருக்குமானால், நான் உத்தேசிக்கிறேன் அது வெளியாகும் مظهر   மழ்ஹர்களில் பலதானதுடனும், அதனுடைய வெளிப்பாட்டில் எண்ணிக்கையானதுடனும், எண்ணிக்கையில் அடங்காத கோலங்களை கொண்டு வெளியாவதுடனும் மட்டிலடங்காத நிறங்களுடனும், கோலங்களுடனும் அது பேதகமாகவுமில்லை, பலதாகவுமில்லை, குறையவுமில்லை, அதிகமாகவுமில்லை, அது எல்லா வெளிப்பாட்டிலும் வெளிப்படும் இடத்திலும் அதனுடைய ஒருமை எனும் தூய்மையில் தரிபட்டதாகும்(பாக்கியானதாகும்.)
சோதரா! ஹக்கான ஒருவனின் தாத்துடைய ஹகீகத்தில் உனது எண்ணம் என்ன?
அதாவது அவனது வெளிப்பாடுகளிலும   متجليات;முதஜல்லிய்யத்தான ஷுஊனாத் எனும் கோலங்களில் வெளியாவதிலும் எண்ணிக்கையான மள்ஹர்களிலும், விதர்ப்பமான வெளியாகும் தளத்திலும் அது அதனுடைய தாத்தில் பலதாகுமா?அல்லது பேதகமாகுமா?
இந்நிலையில் பஞ்சுடைய ஹகீகத்தில் அதாவது அது படைப்புக்களிலிருந்தும் ஒரு படைப்பாக இருக்கும் நிலையில் அதனுடைய பலதான வெளிப்பாட்டில் அதனுடைய தாத்தில் பலதாகவும் இல்லை. அது பேதகமாகவும் இல்லை. ஆயின், அல்லாஹ்வின் தாத்தைப் பற்றி என்ன எண்ணுகிறாய்? فسبحانه تعالي عمايصفون
 
வஸ்துக்களின் அந்தரங்கத்தை விட்டும் திரையை நீக்குதல்.
كشف الغطءعن حقيقة الاشياء
அறிந்து கொள்! சோதரா! ஒரு வஸ்த்துவையும், அது கலப்பற்ற இல்லாமை ஆனதற்குப் பிறகு வெளியில் உண்டானதாக நீ பெற்றுக் கொள்ள மாட்டாய், ஹகீகிய்யான உஜூதுடைய சுற்றிலிருந்து ஒரு சுற்றாய் இருந்தாலே ஒழிய, நீ உண்டானதாக பெற்றுக் கொள்ள மாட்டாய். எப்'படிப்பட்ட சுற்று எனில், அது வெளியாவதற்கு முன்னால் வெளியாகும் தன்மையில் இருந்தது. அதற்குப் பிறகு அது பில்பிஃலில் உண்டாயிற்று. உதாரணம் நீ ஐஸைக் காணுவாயானால் அதற்கு சொந்தமான கோலத்தைக் கொண்டு தண்ணீரை விட்டும் வேறு பிரிந்ததாக ஐஸைக் காணுவாய்.
உன்னுடைய வஹ்மில் அந்த கோலத்தை அந்த ஐஸுக்குரிய ஹகீகத்து என்று ஆக்கிக் கொண்டாய். இன்னும் தண்ணீரினுடைய ஹகீகத்தை விட்டும் வேறு பிரிக்கப்பட்டதாகவும் ஆக்கிக் கொண்டாய். பிறகு தண்ணீரின் நிலையை விட்டும் அதன் குறிப்பான சுற்றை விட்டும், உன்னுடைய திஹ்னு அந்தக் கோலத்தை பிடித்தெடுத்ததன் பிறகு வேறு பிரித்துக் காண்கிறாய்.
இங்கு இரண்டு ஹகீகத்து இல்லை. என்றாலும் அது ஒரே ஹகீகத்தாகும். அது ஐஸ் எனும் உறைந்த கோலத்தைக் கொண்டு வெளியானது தண்ணீருடன் ஒரு வஸ்த்துவை சேர்க்காமலும் தண்ணீரின் ஹகீகத் என்ற நப்ஸின் பேரில் ஒரு வஸ்த்துவை அதிகமாக்காமலும் அந்த உறைந்த கோலத்தில் அது வெளியாயிற்று. தண்ணீரின் ஹகீகத்தாகிறது மீண்டும் ஹகீகிய்யான உஜூதுக்கு ஆதேயமான விசயமாகவேயன்றி வேறில்லை. அதற்கு உலகத்தில் பல இனமாயிருப்பதுடனும் பலதாய் இருப்பதுடனும் தன்னைக் கொண்டு நிலை நிற்கக் கூடிய ஒரு ஹகீகத்து அதற்கில்லை. என்றாலும் அனைத்தும் ஹக்கான ஒருவனான தாத்தின் பேரில் சேகரிக்கப்பட்ட ஆதேயங்களாகும். அதன் சுற்றுகளும் நிலைகளுமாகும்.
நிலைகளுக்கும் சுற்றுகளுக்குமிடையில் வேறு பிரிப்பதென்பது உண்டாகவில்லை. இல்லையானால், உஜூது தனித்த ஹக{கத்தாகவும் ஒரே தாத்தாகவும் ஆகிவிடும். ஆகவே வஸ்த்துக்கள் வகைவகையாகாது அவைகளுக்கிடையில் ஒன்று மற்றொன்றைவிட்டும் வேறு பிரியவும் மாட்டாது.
இதிலிருந்தே நாம் அறிகிறோம். வேறுபிரிவது என்பது எண்ணிக்கையாவதினதும், அதிகமாவதினதும் சுற்றாகும். இன்னும் வஸ்த்துக்கள் இனங்களாவதின் மீளுமிடமுமாகும். வேறு பிரிக்கக் கூடிய விசயத்தை அந்த வேறு பிரிக்கப்பட்ட சுற்றுகளின் ஹகீகத்தாக ஆக்குகிறோம்.

பொதுப்படையின் விரிவுரை
تفصيل الاجمال

அறிந்து கொள் சோதரா!
புள்ளி என்பது பங்கு வைக்க முடியாததையிட்டு கோட்டை விட்டும் பிரித்தறியப்பட்டதாகும்.
கோடு என்பது நீளமானது என்பதையிட்டு அது அல்லாத்ததை விட்டும் பிரித்தறியப்பட்டதாகும்.
தளம் என்பது நீளம், அகலம் என்பதைக் கொண்டு புள்ளி, கோடு, சடம் இவற்றை விட்டும் பிரித்தறியப்பட்டதாகும்.
சடம் என்பது நீளம், அகலம், ஆழம் என்பதைக் கொண்டு புள்ளி, கோடு, தளம் என்பவற்றை விட்டும் பிரித்தறியப்பட்'டதாகும்.
பங்கு வைக்கமுடியாதது என்பதை புள்ளியின் ஹகீகத்தால் ஆக்கினோம்.
தனித்த நீளம் என்பதை கோட்டின் ஹகீகத்தாக ஆக்கினோம்.
நீளம், அகலம் என்பதை தளத்தின் ஹகீகத்தாக ஆக்கினோம்.
நீளம், அகலம், ஆழம் என்பதை சடத்தின் ஹகீகத்தாக ஆக்கினோம்.
இதன்பிறகு சடத்துக்கு பல சுற்றுகளுமத் பல நிலைகளும் உண்டு. அது மட்டிடவேலா, கணக்கிடவோ முடியாது. ஒவ்வொரு சுற்றிலும் மற்ற கோலத்தை விட்டும், வேறு பிரிக்கக் கூடிய குறித்த கோலம் உண்டு. இது صورة النوعية சூறத்துன் நௌஇய்யாவாகும். இந்த நௌஇய்யா எனும் கோலத்துக்கு வெளியாகுதல் உண்டு. அது நௌஇன் (இனத்தின்) தனிப்பிரதியின் கோலமாகும். ஒவ்வொரு இனத்துக்குக் கீழேயும் மட்டிலடங்காத எண்ணிக்கையற்ற தனிப்பிரதிகள் உண்டு. இவை அனைத்தும் குறிப்பான கோலத்தை கொண்டு ஒன்றைவிட்டொன்று வேறு பிரிந்ததாகும். இந்த 'வேறு பிரிக்கும் தன்மை' என்பது அதன் ஹகீகத்தாகும்.
வானம், பூமி அதனிடையிலுள்ள அனைத்து கௌனுகளின் அணுக்களும் கலப்பற்ற சடத்தின் வெளிப்பாடாகும். அந்த வெளிப்பாடுகள் மட்டிட முடியாதது. அதன் சங்கிலித் தொடரான இறக்கத்தை கவனிப்பது கொண்டு முடிவற்றதாகும். உயர்வதைக் கவனிப்பது கொண்டு அது அதிகமானதுடனும் எண்ணிக்கையற்றதுடனும்அது கலப்பற்ற சடத்தின் பேரில் முடிவடையும். கலப்பற்ற சடத்தை நீ பார், அது ஒன்றாயிருப்பதுடன் எப்படி அது அதன் சுற்றுகளையும், நிலைகளையும் கொண்டு மிக அதிகமானது என்பதை நீ கவனித்துப் பார். அந்தச் சடம் பலதானதுடன் ஒன்றானதும் ஒன்றானதுடன் பலதானதும் ஆகும். அந்த சடத்துடைய சுற்றுடைய கோலங்களின் எண்ணிக்கையின் பேரில் பார்ப்பாயானால் அதை நீ பலதாக்குகிறாய். அதனுடைய சடம் எனும் ஹகீகத்தின் ஒருமையை நீ பார்ப்பாயானால், அதை நீ ஒன்றாக்குகிறாய்.
அல்லாஹுத்தஆலா உனது உட்பார்வை எனும் முகத்திலிருந்து வஹ்மு எனும் திரைரைய நீகுகப் போதுமானவனாகும்.
நீ, அந்த இனமாயிருப்பதென்பது அது கலப்பற்ற சடத்தின் பேரில் வந்த ஆதெயமேயன்றி வேறில்லை என்பதை அறிந்தாய்.
நீ அறிந்து கொள் சோதரா! ஆதேயத்திற்கு தனித் உஜூது இல்லை. கலப்பற்ற சடத்தின் உஜூதைத் தவிர.
எந்த ஒரு வஸ்த்துவும் தன்னுடைய உஜூதைக் கொண்டு நிலைத்திருக்காமல் இன்னொரு வஸ்த்துவின் உஜூதின் பேரில் நிலைத்திருக்குமானால் அதற்கு வஹ்மு, கியாலு என்று பெயர் வைப்போம்.
இப்பொழுது நீ அறிந்திருக்கிறாய் நிச்சயமாக கௌன்களாகிறது அது பலதாயிருப்பதுடனும், இனங்களாக இருப்பதுடனும் தனித்த சடத்துக்கு ஆதேயமாகும். அதற்கு தனித்த ஒரு உஜூதில்லை. என்றாலும் அதனுடைய உஜூதாகிறது தனித் சடத்தின் உஜூதின் ஐனேயாகும். எனவே நிச்சயமாக கௌன்களாகிளது கற்பனையும் பிரமையும் என்று தரிபட்டு விட்டது. என்றாலும் அது அவல்லாஹ்வின் இல்மைக் கொண்டு உறுதியாக்கப்பட்டதும் அவனது குத்ரத்தைக் கொண்டு நிலை நிற்கின்றதும் அவனுடைய ஹிக்மத்தைக் கொண்டும் நாட்டத்தைக் கொண்டும் ஒழுங்காக்கப்பட்டதுமாகும்.
இந்த இரண்டு கவிதையையும் உடையவர் (ஷெய்குல் அக்பர் -அல்லாஹ் எங்களையும் அவர்களையும் பொருந்திக் கொள்வானாக) சொன்னது போல கௌனுகள் கற்பனையாகும்.
நீங்கள் இந்த விளக்கத்தைக் கொண்டு தனித்த சடத்தின் வஹ்தத்தையே தரிப்படுத்தினீர்கள். ஹக்குடைய உஜூதுடைய வஹ்தத்தை அல்ல என்று நீ எனக்குச் சொல்லலாம்.
நீ அறிந்து கொள் சோதரா! நிச்சயமாக சடத்துக்கு الحيوة)சீவன், (العلم) அறிவு, நாட்டம(الارادة);, சக்தி ( القدرة), (السمع)கேள்வி, ( البصر) பார்வை, ( الكلام)பேச்சு, தேர்ந்தெடுக்கும் தன்மை  (الاختيار)  இவைகள் இல்லை.
பிறகு இது, இவை ஒன்றுமில்லாமல் இருப்பதுடன் அது வெளியில் குறிப்பான வழியிலும் கோர்வையிலும், அதற்கென்று சொந்தமான அஹ்காம் ஆதாறுகளுடனும் அது வெளியாகிக் கொண்டே இருக்கின்றது. அந்த குறிப்பான கோலத்தை விட்டும் அதனுடைய ஆதாறும், அஹ்காமும் அதை விட்டும் ஒருக்காலமும் நீங்குவதில்லை அல்லாஹ் நாடினாலே ஒழிய. அந்த நீங்குதல் என்பது அல்லாஹ்வின் மிகைத்த ஹிக்மத்து வழைமயை கிழிப்பதை நாடினாலே ஒழிய நடைபெறாது. இந்த வழமையை கழிப்பது المعجزة)முஃஜிஸாத்;தாக, ( الكرامة) கராமத்தாக,  الاعانة)இஆனத்தாக, இஸ்தித்ராஜாக الاستدراج)இருந்தாலம் சரி. இந்த வழமையான விசயங்களுக்கு சொந்தமான ஒரு கோர்வையும் ஒரு குறிப்பான வழியும் உண்டு. அல்லாஹ்வுடைய படைப்புக்களிலிருந்து ஒரு படைப்பும் அதாவது அவன் الحكيم)ஹகீமாக காமிலான ஹாதிக்காக( الحاذق) இருந்தாலும் சரி, இவற்றை இல்லாமலாக்கவோ, மாற்றவோ  சக்தி பெறமாட்டார்கள். உலகிலுள்ள எல்லா அணுக்களும் ஒரே சடமாகும். அதனுடைய உள்ளமை உலகத்திலுள்ள ஒவ்வொரு அணுவிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதைச் சூழ்ந்து கொண்டும் இருக்கிறது என்பது உனக்கு மறையாது. இத்துடன் அந்த சடத்துக்கு எல்லா கோலங்களிலும் ஒரு சொந்தமான தீர்ப்பும் சொந்தமான ஒது கோர்வையும் உண்டு.ஆனால் அதில் ஜீவன், நாட்டம், சக்தி, தேர்ந்தெடுக்கும் தன்மை இவைகள் அறியப்படாமல் இருந்தாலும் சரி, அதனுடைய கோர்வை ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் அதனுடைய தேர்ந்தெடுக்கும் தன்மையைக் கொண்டு தீர்ப்பளிக்கின்றது.உண்மையில் அதற்கு தேர்ந்தெடுக்கும் தன்மை இல்லை. இதிலிருந்து விளங்கப்படுகிறது அதாவது வேறொரு மவ்ஜூதான பொருள் உண்டு என்பது அறியப்படுகிறது.
அதுவே ஜீவனுள்ள, அறிவுள்ள, நாட்டமுள்ள, சக்தியுள்ள, கேள்வியுள்ள, பார்வையுள்ள, பேச்சுள்ள, நுணக்க விளக்கமுள்ள, சுயமான இயக்கமுள்ள அவனுடைய சுயத்தைக் கொண்டு தீர்ப்பளிக்கின்ற தன்மைகளாகும்.
ஹிக்மத்தைக்கொண்டும் அவனுடைய சுயத்தைக் கொண்டும் அவன் எதை நாடுகிறானோ அதைக் கொண்டு தீர்ப்பளிப்பவனும், அவன் சக்தியைக் கொண்டும், அறிவைக் கொண்டும் அவன் நாடினதை செய்யக்கூடியவனும் உள்விளங்கி அறிந்தவனுமவான்.
நாங்கள் இந்த உண்மையான விசயத்தை உனக்கு விளக்கியதன் பிறகு கூறுகிறோம். நிச்சயமாக சடமாகிறது ஹகீகிய்யான உஜூதுக்கு ஆதெயமானதாகவே ஒழிய இல்லை. அது ஹகீகிய்யா மவ்ஜூதான பொருளுமல்ல. என்றாலும் அதற்கு வஹ்மியானதும் கியாலியானதுமான உஜூதுண்டு. எண்ணிக்கையாக்கப்பட்ட இனங்கள் போலவும் அதிகமாக்கப்பட்ட இனங்களின் கோலஙகளில் வெளியாவது போலவும்,
இந்த விஷயங்களெல்லாம் ஹகீகத்தில் அதன் அசலின் பக்கம் திரும்புகிறது. அது ஹக்கான உஜூதாகும். மீளுவதும் உண்டாவதும் அதன் பக்கமே ஆகும். இப்போது  தரிபட்டுவிட்டது. நிச்சயமாக கௌனுகளாகிறது அதனுடைய எல்லா அணுக்களுடனும், வஹ்மும், கியாலும் ஆகும் என்பது தரிபட்டு விட்டது. இன்னும் உன்னுடைய திஹ்னில் பிடித்தெடுக்கப்பட்டவைகளுமாகும்.
சுற்றுகள் என்பது ஹக்கான உஜூதின் ஐனாகும். நிச்சயமாக அந்த உஜூது வேறnhரு அதிகமான விசயத்தைக் கொண்டும் ஒரு வஸ்துவை அதனுடன் சேர்ப்பது கொண்டும் சுற்றுடையதாக ஆகவுமில்லை. என்றாலும் அந்த உஜூதுடைய ஐனு தட்டிலடங்காத பல சுற்றுகளைக் கொண்டு சுற்றுடையதாக ஆகிறது. கடைசிவரையும், உலகம் என்பது பிடித்தெடுக்கப்பட்ட விசயமாகும். வஹ்மிலும், கியாலிலுமே அல்லாது அவை தரிபடுவதில்லை. அப்போது உஜூதுடைய சுற்று உண்டாகும் இடதாகிறது அது உஜூதுடைய ஐன் ஆனதற்காக வேண்டி அது ஹக்கானதும், உண்மையானதும், நிகழ்ந்ததுமாகும். எனவே முஹக்கீகான சொன்னவருடைய சொல்லு அதாவது 'ஹக்' என்று சொன்ன சொல்லும் انماالكون خيال فهو حق في الحقيقة என்ற சொல்லும் தரிபட்டுவிட்டது.
முன்பு நான் விபாரித்ததிலிருந்து அறிந்திருக்கலாம். நிச்சயமாக எல்லா விசயமும் ஒரு வஸ்துவை விட்டும் இன்னொரு வஸ்துவை பிரித்துக் காட்டுமே அந்த விசயங்கள் அந் வஸ்துக்களின் ஹகீகத்தாகும்.
வஸ்த்துக்கள் தம்மில் பிரிக்கக் கூடிய விசயமாகிறது  வஸ்த்துக்களின் ஹகீககத்துகளாகும். ஹகீகத்தில் இந்த சொல்லப்பட்ட விசயங்களை ஹகாயிக்கு என்று n பயர் வைப்பதற்கு தகுதியாகாது. அதாவது வெளியிலும், சுயத்திலும் அது தரிபடுத்தப்பட்டிருக்கிறது என்ற கருத்தின்படிக்கு ஹகாயிகு என்று பெயர் வைப்பதற்கு அருகதையாகாது. ஏனெனில் அது வெளியில் அறியப்படவும் இல்லை. சுயமான, வெளியான உஜூதின் வாடையைக் கூட அது நுகரவுமில்லை. கியாலியும் வஹ்மியுமான உஜூதைத் தவிர.
பிடித்தெடுக்கப்பட்ட கௌன்களாகிறது அதை தரிபடுத்துவதை மேற்காட்டியது போல இப்பவும் அது வஹ்மியும், கியாலியுமான உஜூதாகும்.

ஹகீககிய்யான ஜவ்ஹரை திட்டப்படுத்துதல்
تحقيق الجوهر الحقيقي
அறிந்து கொள் சோதரா! வஸ்த்துக்களின் ஹகாயிக்குகளிலிருந்து ஒரு ஹகீகத்தும், வஸ்த்துக்களிலிருந்து  ஒரு வஸ்த்துவும், ஹகீகத்தில் ஜவ்ஹராக இல்லை. என்றாலும் எல்லாம் கலப்பற்ற ஆதேயமாகும்.
அதில் சிலதை நாம் வேறு பிரிப்பதற்காகவும், விளக்குவதற்காகவும் ஆதாரங்களாகவும்  الجوهر சிலதை ஆதேயங்களாகவும் الاعراض ஆக்கினோம். இன்ஸானுடைய வரைவிலக்கணத்தில் நீ சொல்வது போன்று, அதாவது இன்ஸான் ஒரு சடமானதும், வளரக் கூடியதும், புலனறிவுடையதும், நாடி உசும்புகிறதும், நிமிர்ந்து நிற்பதும், நகம் அகன்றவனும் இரண்டு காலில் நடப்பவனும், பேசுபவனும் போன்றவைகள் போல. இந்த மொத்தத்துக்கு 'ஹகீகத்துல் இன்ஸான்' என்று பெயர் வைக்கப்படும். நீ சகோதரா! சிந்தித்து உணர்ந்தாய். ஆனால் உன் பார்வையை கூர்மையாக்கினால், இந்த எல்லா விசயத்தையும் இன்ஸானுடைய வரைவிலக்கணத்தில் புகந்த ஜவ்ஹர் அல்லாத்த ஆதேயமாக பெற்றுக் கொள்வாய்.
ஆகவே, சடம், வளருதல், புலனறிவு, உசும்புதல், நீளம், அகலம், நடக்குதல், பேசுதல் என்பன ஆதேயங்களாகும். இந்த ஆதேயங்கள் அனைத்தும் உனது திஹ்னில் நீ சேகரித்து அதிலிருந்து குறிப்பான ஒரு கோலத்தையும் பிடித்தெடுக்கிறாய். அதற்கு நீ 'ஹகீகத்துல் இன்ஸான்' என்று பெயரும் வைக்கிறாய்.
இனங்களாக ஆக்கப்பட்ட வஸ்த்துக்களின் ஹகாயிகுகளையும் பலதான காயினாத்துக்களின் ஹகாயிகுகளையும் இதன் பேரில் ஒழுங்கு பிடித்துக் கொள்.
உலகமாகிறது ஆதெயமே அல்லாதில்லை. அதற்கு நாம் ஜவ்ஹர் என்று பெயரும் வைக்கவில்லை. ஆனால் அந்த உலகமாகிறது الجوهر الاضافي ஜவ்ஹர் இளாபி (சுயமாக நிற்கக் கூடியதல்ல) ஆகும். ஹகீகிய்யான ஜவ்ஹர் அல்ல. என்றாலும் ஹகீகிய்யான ஜவ்ஹர் என்பது ஹக்குடைய உஜூதாகும்.
அதாவது ஜவ்ஹர் என்ற பெயரை அல்லாஹ்வுடைய உஜூதின் பேரில் புழங்குவதானது விலக்கப்பட்டதாகும். அப்படியிருந்தும் உஜூதை ஹகீகிய்யான ஜவ்ஹர் என்று எப்படி ஆக்கினீர்கள் என்று நீ சொல்லலாம். அப்போது நான் சொல்கிறேன்,
எந்த ஒரு வஸ்த்துவையும் உஜூதைக் கொண்டு தனித்ததாக நீ பெற்றுக்கொள்ள மாட்டாய். ஹக்கான உஜூதைத் தவிர. அந்த உஜூது இந்தக் கருத்தைக்கொண்டு ஜவ்ஹராகும். உன்மீது அந்த உஜூதின் பேரில் ஜவ்ஹர் என்னும் الاسمஇஸ்மை புழங்குவது, இந்த அர்த்தத்தின்படிக்கு குற்றமில்லை. (நான் உஜூதைக் கொண்டு தனித்திருத்தல், தாத்தைக் கொண்டு அது உண்டான பொருள் என்பதை நாடுகிறேன்) நிச்சயமாக அதுவாகிறது ஜீவனுள்ள நிலைத்திருப்பவன் உன்ற கருத்தைக் கொண்டதாகும். கருத்து துலாம்பரமானதின் பின்னும் நாட்டம் விளங்கினதன் பின்னும் பரிபாஷையில் தர்க்கமில்லை.

இடம்பிடித்தலின் உள்ளமை

( تحقيق الحيز)
நீ சொல்வாயானால், நிச்சயமாக நீங்கள் உலகமாகிறது ஹக்குடைய உஜூதில் சேர்க்கப்பட்ட ஆதேயங்களாகும் என்றும், அப்போது உஜூதாகிறது ஆதேயங்களுக்கு இடமாகிறது என்றும் அந்த இடமாகுதல் புதிதான வஸ்த்துக்களின் குணபாடாகும் என்றும் அந்நேரம் ஹக்குடைய உஜூதாகிறது புதிதானவைகளுக்கு இடமாக ஆகிறது. இது ரொம்ப கடுமையாக விலக்கப்பட்டதாகும் என்றும் நீ சொல்வாயானால், நான் சொல்கிறேன்,
அந்த இடமாகுவது என்பது, இரண்டு வஸ்த்துக்களிடையே ஒழிய அது உண்டாகாது. உதாரணம்:ஒன்றில் ஒன்று விடுதிவிடுவது போல,
இங்கு ஒரேயொரு உஜூதைத் தவிர வேறில்லை. ஆகவே இடமாகுவதுமில்லை. ஒன்றாகுவதுமில்லை. ஒன்றில் ஒன்று விடுதி விடுவதும் இல்லை.
நிச்சயமாக உஜூதுடைய சுற்றுகளும் நிலைகளுமாகிறது உஜூதுக்கு ஐனாகுமே அதற்காகவேதான்.இந்த இடத்தில் ஆதாரமுமில்லை. ஆதேயமுமில்லை. நாங்கள் ஹுகமாக்களின் பரிபாஷையை அனுசரித்து அல்லாஹுத்தஆலாவை ஆதாரமென்றோ, ஆதெயமென்றோ சொல்ல மாட்டோம். அல்லது சமட்டி الكلي என்றோ, الجزئي வியட்டி என்றோ சொல்ல மாட்டோம்.
என்றாலும் அது அதன் தூய்மை என்ற தானத்தில் அது பொதுப்படையாக இருக்கிறது. எல்லாக் கட்டுப்பாட்டை விட்டும், பொதுப்படை என்ற கட்டுப்பாட்டை விட்டும் என்றாலும் விளக்குவதற்காக வேண்டி அறியப்பட்ட, புழங்கப்பட்ட பாஷைகளையும், சொற்களையும் நாங்கள் இரவலாக பாவித்தோம். ஏனெனில் அதன்பேரில் அறிவிக்கக் கூடிய பாஷைகள் இல்லாததினாலாகும். அதற்காக வைக்கப்பட்ட சொற்களும் இலேசாக இல்லாததினாலாகும். இன்னும் அல்லாஹுத்தஆலாவின் சுற்றுகளின் பேரிலும் வைக்கப்பட்ட சொற்களும் பாஷையும் இல்லாததினாலாகும். அவன் தூய்மையானவன் இரவல் எனும் வழியில் பாஷையிலிருந்து அறியப்பட்ட சொற்களை நாங்கள் தூய்மையாகப் பாவித்தோம். இந்த நுணக்கமான கருத்தின் பேரில் ஆரம்பமான தேட்டமுடையவனின் விளக்கம் இதில் முடுகுவதற்காக. நீ விளங்கிக் கொள்.

தொடர்பின் பயான்
بيان النسب

அறிந்து கொள் சோதரா! உலகிலுள்ள அணுக்களிலிருந்து ஒவ்வொரு அணுக்களுக்கும் அல்லாஹ்வுடன் ஒரே தொடர்புதான் உண்டாயிருக்கிறது. ஒரு வட்டத்திற்கு அதன் மையப்புள்ளிக்குள்ள தொடர்பு போல, அப்போது ஒரு அணுவும் உண்டாகவில்லை. உண்டாகவும் செய்யாது ஆரம்பத்திலிருந்து கடைசிவரை, அஹதிய்யா என்னும் மர்தபாவிலிருந்தே ஒழிய. இந்த அஹதிய்யாவாகிறது பொதுவான தனித்த உஜூதே அல்லாதில்லை. அந்த அஹதிய்யத்தாகிறது இலாஹியத்தான, கௌனியத்தான அஸ்மாக்கள் எனும் ஜவ்ஹர் அடங்களுக்கும், இன்னும் முடிவில்லாத வெளிப்பாடுகளுக்கும், மட்டிலடங்காத தஜல்லியாத்துக்களுக்கும், எண்ணிலடங்காத சுற்றுகளுக்கும் கன்ஸு  الكنز ஆகும்.
என்றாலும் அந்த உஜூதுக்கு தொடர்ந்ததும், தொடரப்பட்டதுமான பல வெளிப்பாடுகள் உண்டு. இந்த தஜல்லியாத்துக்களிலிருந்து தொடரப்பட்ட தஜல்லியாகிறது அதைத் தொடர்ந்த தஜல்லிக்கு ஷர்த்துகளாகும். காரியம் உண்டாவதை நிர்பந்தமாக்கக் கூடிய பரிபூரண காரணமல்ல. ஆதியிலிருந்து அல்லாஹ்வுடைய ஹிக்மத் ஆச்சரியமான கோர்வையின் பேரிலும் தனித்துவமான ஒழுங்கின்பேரிலும் அவனது குறிப்பான கோலத்தைக் கொண்டு தஜல்லியானதன் பிறகு இன்னொரு குறிப்பான கோலத்தைக் கொண்டு வெளியாகுவதைத் தேடியது.
அதை அவனது வழமையாக ஆக்கிக் கொண்டான். கதீமான அவனது கிதாபில் அவன் ولن تجد لسنة الله تبديلا (நீங்கள் அல்லாஹ்வுடைய வழக்கத்துக்கு மாற்றத்தை பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்) என்று  சொன்னது போல. தொடரப்பட்ட முந்தின கோலத்தின் வெளிப்பாட்டை அவன், அதைத் தொடர்ந்து இரண்டாவது கோலத்தில் வெளியாவதற்கு ஷர்த்தாக ஆக்கினான்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக