புதன், 2 மே, 2012

விவாகரத்துகள் – சில புள்ளி விவரங்கள்

mohammed zubair



சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 4 குடும்ப நல நீதிமன்றங்கள் இருக்கின்றன. மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு குடும்பநல நீதிமன்றம் இருக்கிறது. இவற்றுடன் ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் சிவில் கோர்ட்டுகளிலும் தினசரி விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன. 1980-களில் ஓராண்டுக்கே 20 – 30 விவாகரத்து வழக்குகள் வரைதான் ஒரு நீதிமன்றத்துக்கு வரும். இன்று தினமும் ஒவ்வொரு நீதிமன்றத்துக்கும் குறைந்தது 10 வழக்குகள் என்கிற அளவுக்கு நிலைமை கைமீறிப் போயிருக்கிறது.
சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2008-ல் 25 வயதுக்குள் விவாகரத்து பெற்ற ஆண்கள் 2%, 2011-ல் 4%. 2008-ல் பெண்கள் 3%, 2011-ல் 6%.
மும்பை, டெல்லி, லக்னோ, சென்னை போன்ற பெருநகரங்களில் விவாகரத்து வழக்குகள் அநியாயத்துக்கும் பெருகிக் கொண்டிருக்கின்றன. 1990-களில் வருடத்துக்கு 1,000 வழக்குகள் பதிவான நிலையில், அடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2000 ஆண்டுகளில் வருடத்துக்கு 9,000 வழக்குகள் என உயர்ந்துள்ளது.
இதில் 25-35 வயதுக்கு உட்பட்டவர்கள் 75 சதவிகிதத்தினர். திருமணம் செய்துகொண்ட 3 ஆண்டுகளுக்குள் விவாகரத்துக்கு விண்ணப்பித்தவர்கள் 85 சதவிகிதத்தினர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக