நிக்கோடின் தடவப்பட்ட கம்பியால் யானையைக் குத்தினால், அது உடனே மயங்கி
சரிந்து விடும். அந்த அளவு மோசமானது, நிக்கோடின்.
ஒரு சிகரெட்டில் ஒரு மில்லிகிராம் நிக்கோடின் உள்ளது. இந்த நிக்கோடினை
தனியே பிரித்தெடுத்து ஊசியால் உடலுக்குள் செலுத்தினால், ஆள் உடனே
இறந்துவிடுவார்.
இத்தகைய கொடிய நஞ்சுதான் புகைபிடிக்கும்போது, கொஞ்சம் கொஞ்சமாக
உடலுக்குள் சென்று, கொஞ்சம் கொஞ்சமாக ஆளைக் கொலை செய்கிறது.
நிக்கோடினுடன் சேர்ந்து சிகரெட்டில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு
இரசாயனங்கள் உள்ளன. ஒருவர் ஒரு சிகரெட்டு புகைத்தால், அவரது வாழ்நாளில்
ஏழு நிமிடம் குறைகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
உச்சி முதல் உள்ளங்கால் வரை
உச்சி முதல் உள்ளங்கால் வரை சிகரெட்டு பாதிக்கிறது. சிகரெட்டில் உள்ள
நிக்கோடின் நஞ்சு, போதைப் பொருளாகச் செயல்பட்டு மூளையை
அடிமைப்படுத்துகிறது. சிகரெட்டு புகையை உள்ளிழுத்தவுடன் நுரையீரலில்
நிரம்பும் புகையானது, ஏழு விநாடிக்குள் மூளையைத் தாக்குகிறது. இதயத்
துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால்
புகைப்போர் மாரடைப்பால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் உள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், சிகரெட்டு
அறிவுத்திறனை பாதிப்பதையும், நினைவை மழுங்கடிப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
தொண்டைப் புற்று
புகையிலையில் உள்ள புற்றுநோய் உண்டாக்கும் நச்சு இரசாயனங்கள் வாயில் உள்ள
உமிழ்நீர் சுரப்பிகளைப் பாதிக்கின்றன. சுமார் 80 விழுக்காடு தொண்டைப்
புற்றுநோய்க்கு புகைபிடித்தலே காரணமாகிறது.
புகைப்பிடிப்பதால் தோல் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது.
இதனால் தோல் கடினமாவதுடன் சுருக்கம் விழுவதும் அதிகமாகிறது.
புகையிலையில் உள்ள தார் என்ற பொருள் விரல்களையும் நகங்களையும் மஞ்சள்
நிறமாக்குகிறது. சொரியாசிஸ் எனப்படும் கொடிய தோல் நோயால் தாக்கப்படும்
வாய்ப்பு புகைப்பிடிப்போருக்கு இரண்டு மடங்கு அதிகம் உண்டு.
சிகரெட் பிடிக்கும் ஆண்களால் பெண்களுக்கும் பாதிப்பு
ஆண்கள் புகைபிடிப்பதாலோ அல்லது புகைபிடிப்போருக்கு அருகில் இருக்கவோ
நேரும் பெண்கள், மாதவிலக்கின் போது அதிகம் துன்பப்படுகின்றனர்.
இத்தகையோருக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவதுடன், கருக்கலைவதற்கும்
அதிக வாய்ப்பு உண்டு.
புகைபிடிக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், சராசரியாக அரைக்கிலோ
எடைக்குறைவாக பிறக்கின்றன. இதனால், குழந்தை இறப்பு விகிதமும்
அதிகரிக்கிறது. ஊனத்துடன் குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்பு உண்டு.
சிகரெட்டும் செக்ஸ்ஸும்
புகைப்பதனால் விளைகின்ற தீமைகளைப் பட்டியலிட்டால் அது முடிவில்லாது
நீண்டு கொண்டே போகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்பதனால் ஏற்படுகின்ற
தீமைகள் என்ற உத்தேசமாகச் சொல்லப்பட்டு வந்தவை அனைத்தும் இன்றைக்குப் பல
அறிவியல் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு விட்டன. இவ்வகை ஆய்வுகள்
மேலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந்த வரிசையிலே புகையிலையுள்ள நிகோடின் (Nicotine) எனப்படும் நஞ்சினால்
ஏற்படக்கூடிய குறைபாடுடைய கரு. கருச்சிதைவு போன்றவைகள் பற்றிய பல ஆய்வு
முடிவுகள் வந்துள்ளன. அவற்றைத் தொடர்ந்து தற்போது புகைப்பழக்கம்
இனக்கவர்ச்சி ( Sex attraction) யை அழிப்பது டன் ஆண் பெண் உடலுறவைப்
பெரிதும் பாதிக்கின்றது எனப்பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து புகைக்கின்ற பல ஆண்கள் உடலுறவில்
நாட்டம் இன்றி போகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
அண்மையில் போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் சிறுநீரியல்
துறைத் தலைவரான டாக்டர் இர்விங் கோல்ட் ஸ்டெய்ன் (Dr.Lrving Goldstein
Prof. of Urology, New England Male Reproductive Center, Boston
University Medical School) மற்றும் ஆய்வாளர்களால் செய்யப்பட்ட இரண்டு
ஆய்வுகளின் மூலம் ஆண்குறி விறைப்பின் மைக்காக மருத்துவம் செய்து கொள்ள
வந்த 1011 ஆண்களில் 78 சதவிகிதம் அதாவது 789 பேர்கள் தீவிரமான
புகைப்பழக்கமுள்ள வர்கள் என்பது தெரியவந்ததுடன், இவர்கள் அனைவரிடமும்
காணப்பட்ட பொதுவான காரணம் புகைப்பழக்கம் என்பதுதான்.
புகைபிடிக்காதவர்களிடையே இது போன்ற குறை உள்ளவர்களின் எண்ணிக்கையைப் போல்
இது மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்குறிக்கு இரத்தத்தை எடுத்துச் செல்கின்ற இரத்தக் குழாய்கள்
நிகோட்டினினால் பாதிக்கப்பட்டுக் குறுகிப் போவதே இதற்குக் காரணமாக
இருக்கக் கூடுமென்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இரண்டாவது ஆய்வில் ஆண்குறி அளவு குன்றல் ஆகியவற்றிற்கு மருத்துவம்
செய்துகொள்ள வந்த 120 புகைப்பழக்க முடையவர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.
நுண்ணிய கருவிகளைக் கொண்டு அவர்களது ஆண்குறிக்குச் செல்கின்ற இரத்தத்தின்
அளவைக் கணக்கிட்டுப் பார்த்தபோது புகைக்கின்ற சிகரெட்டுகளின் எண்ணிக்கை
அதிகரிக்க அதிகரிக்க இரத்தம் செல்கின்ற அளவு குறைந்து கொண்டே வந்தது
கண்டுபிடிக்கப்பட்டது.
இது தவிர வேறொரு ஆய்வின் மூலம் ''புகைப்பழக்க முடையவர்களின் விந்தணுப்
பாகில் விந்தணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து இருப்பதும்
அறியப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களின் விந்தணுப்பாகில் காணப்பட்ட விந்தணுக் களில் பல
குறைபாடு உடையவை களாகவும், இயல்பு நிலைக்கு மாறுபட்டவை களாகவும் (Normal)
இருந்தன.'' ('Tobacco affects Reproduction' Smoking & Health Reporter _
vol-3, No.2.P.3 jan91)
மேலும் அமெரிக்க மருத்துவர்கள் சங்க இதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி
புகைப்பதை வழக்கமாகக் கொண்ட பெண்கள் பாலுறவில் ஆர்வம் குன்றியவர்களாக
உள்ளனர். அத்துடன் அவர்களது கருவுறும் திறனும் 43 சதவிகிதம் குறைவு
பட்டிருந்தது- (Smoking and delayed conception -D.D. Baird & Wicox-
JAMA-Vol253 No 20 2979 - 2983)
மற்றுமொரு ஆய்வின்படி புகைக்கின்ற பெண்கள் பிற பெண்களை விட இரண்டாண்டுகள்
முன்னரே மாதவிலக்கு நிற்கின்ற நிலையை (Menopause) அடைகின்றனர் என்று
தெரியவந்தது. (''Smoking and Meno pause in Woman'' -Annals of Internal
Medicine-Vol 103 PP.350-356)
மேற்கண்ட ஆய்வு முடிவுகளிலிருந்து செக்ஸ் எனும் பாலுறவு நிலைக்கும்
புகைப்பழக்கத்திற்கும் மறுக்கமுடியாத தொடர்பு உள்ளது என்பது
உறுதியாகின்றது. ஆண்மைக் குறைவு பற்றி மனங்குமைந்து கவலைப்படுபவர்கள்
புகைப் பழக்கமுடைய வர்களாக இருந்தால் உடனடியாக அப்பழக் கத்திலிருந்து மீள
முயல வேண்டும். அவர்கள் இழந்த இல்லற சுகத்தை அடைய இதுவே வழி.
பார்வைக் குறைவு
அதிகமாக புகைபிடிப்போருக்கு கண்களில் விழித்திரை நோய் தாக்கும் வாய்ப்பு
இருமடங்கு உண்டு. முதுமையடையும்போது பார்வைக் குறைவு ஏற்படும் வாய்ப்பும்
5 மடங்கு அதிகம் உண்டு.
வாய் மற்றும் நாக்கில் புற்றுநோய் தாக்குவதற்கு புகைபிடிப்பதும்,
புகையிலைப் பொருட்களை சுவைப்பதுமே முதன்மை காரணம். வாய்ப் புற்றுநோய்
வரும் வாய்ப்பு புகைப்பிடிப்போருக்கு 30 மடங்கு அதிகமாகும்.
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மட்டும் வாய்ப் புற்றால் ஆண்டுக்கு 1
இலட்சத்து 50 ஆயிரம் பேர் இறந்துபோகிறார்கள்.
புகைப்பிடிப்பதால் வாய் துர்நாற்றம், பற்களும் ஈறுகளும் சேதமடைதல்,
பற்கள் மஞ்சள் நிறமாதல் என பல பாதிப்புகள் நேர்கின்றன.
மாரடைப்பு
புகைபிடிப்பதால் இரத்து அணுக்களில் கரிக்காற்று திணிக்கப்பட்டு,
உயிர்காற்று பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், இதயம் உயிர்வளிக்காக
ஏங்குகிறது. சாதாரணமானவர்களைவிட, புகைபிடிப்போர் 15 மடங்கு வரை அதிகமாக
இதய நோய்களுக்கு ஆளாகின்றனர்.
சிகரெட்டு அதிகமாக தயாரிக்கப்படுவதும், அதிகமானோர் புகைபிடிப்பதும் கடந்த
நூறாண்டுகளாகத்தான். அதற்கு முன்பெல்லாம் உலகில் நுரையீரல் புற்றுநோய்
என்பது கேள்விப்படாத ஒன்றாக, எங்கோ ஒன்றுதான் கண்டறியப்பட்டது.
மூச்சுத்திணறல், இருமல், இரத்த வாந்தி என இன்னும் பல பாதிப்புகளுக்கு
புகைபிடித்தல் காரணமாகிறது.
புகைபிடித்தால் இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால், உடலின்
பாகங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. உடல் பாகங்களின்
செயல்திறன் குறைகிறது. இதனால், நடப்பதுகூட வலி மிகுந்த செயலாகிவிடுகிறது.
கால் செயலிழக்கும் நோயால் தாக்கப்படுவோரில் 90 விழுக்காட்டினர்
புகைபிடிப்போர்தான்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக