வானத்துக்கு மேலே-பூமிக்கு கீழே நடப்பவைகளைப் பற்றியே மதரஸாக்களில் போதிக்கப் படுகின்றன; உலகம் பற்றியும் நிகழ்வுகள் பற்றியும் அறியும் ஆர்வம் துளியும் இவர்களுகில்லை என்று கேலியாகச் சொல்லப்பட்ட மதரஸாக்கள், சமீபகாலங்களில் மதரஸாக்களையும் அதில் பயிலும் மாணவர்களையும் தீவிரவாதத்துடனும் தீவிரவாதிகளுடனும் இணைத்து பேசப்படுகிறது.
“என்னவாயிற்று இவர்களுக்கு? காலங்காலமாக மதரஸாக்கள், இஸ்லாமியக் கல்வியை போதித்து வருவதாகத்தானே அறிந்திருந்தோம். ஏன் திடீரென்று அவை குண்டு வெடிக்கவும், தற்கொலை தாக்குதல் நடத்தவும் பயிற்சி கொடுக்கும் தீவிரவாத தொழிற்சாலையாகின?” என்று கேட்பவர்கள், மதரஸா என்றால் என்ன? அதன் பாடத்திட்டங்கள், பயன்பாடுகள் பற்ரி விளங்கிக் கொண்டால் தீர்க்கமான முடிவுக்கு வரமுடியும் என்ற ஆவலில் சில கருத்துப் பரிமாற்றம்.
‘மதரஸா’ என்ற அரபிப் பதம், மற்ற மொழிகளில் சொல்லப்படும் பள்ளி,ஸ்கூல் ஆகியவற்றின் நேர்மொழியாக்கமே. இதர மதங்களின் அல்லது மதங்களல்லாத கல்விக்கூடங்களுக்கு எப்படி பள்ளி/School என்று அழைக்கிறோமா, அதே அர்த்தம்தான். மதரஸா என்பதற்கும் பொருந்தும்.மதரஸா (مدرسه) என்றால் “கல்விக்கூடம்” என்று பொருள். மூலம் அரபி என்றாலும் உர்தூ, பார்ஸி, துருக்கி, குர்திஸ், இந்தோநேசியன், மலேசியன் ஆகிய மொழிகளிலும் கல்விக் கூடங்களுக்கு இச்சொல் பிரயோகிக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் இதை மொழியாக்கம் செய்யும் போது பிரிட்டிஷார் “பள்ளிக்கூடம்” என்ற அர்த்தத்திலும் அமெரிக்கர்கள் “பல்கலைக் கழகம்” என்ற அர்த்ததிலும் பிரயோகிக்கின்றனர்.(பல்கலைக் கழகத்திற்கு அரபியில் ‘ஜாமிஆ’ என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது)
உலக நாடுகளில் சாதாரணக் குடிமக்களுக்கு அந்தந்த அரசுகளால் கல்வி வசதியை பரவலாக வழங்க முடியாத சூழலில், மதம் சார்ந்த சேவை நிறுவனங்களும் மிஷனரிகளும் இப்பணியை இலாப நோக்கின்றி அல்லது குறைந்த செலவில் வழங்குகின்றன. இதர மதங்களின் வேதாகமப் பள்ளிகளில் எப்படி அந்தந்த மதவேதங்கள் போதிக்கப் படுகின்றனவோ, அதேபோல்தான் மதரஸாக்களில் குர்ஆன் போதிக்கப் படுகிறது.
மதரஸாக்களில் இரண்டு வகையான பாடத்திட்டங்கள் போதிக்கப் படுகின்றன. சரியான உச்சரிப்புகளுடன் முழுக் குர்ஆனையும் அரபியில் மணனம் செய்பவர்களுக்கு “ஹாபிழ்/ஹாபிஸ்” என்ற பட்டமும், குர்ஆனையும் ஹதீஸையும் பொருள் அறிந்து மணனம் செய்வதுடன் ஷரீஅத் சட்டங்களையும், விளக்க உரைகளையும், இஸ்லாமிய வரலாற்றையும் முழுமையாகக் கற்றவருக்கு “ஆலிம்/உலமா” என்ற பட்டமும் வழங்கப் படுகின்றது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி மதரஸாக்கள் நடத்தப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப கணினிப் பயிற்சி, பிறமொழிப் பயிற்சியும் வழங்கப் படுகின்றன. ஹாபிழ்/ஹாபிஸ் பட்டம் பெற 1-2 வருடங்களும் ஆலிம்/உலமா பட்டம் பெற 7-12 வருடங்களும் ஆகும். இப்பட்டம் பெற்றவர்களே பெரும்பாலும் மஸ்ஜிதுகளில் தொழுகை நடத்துவர். இவர்கள்தான் நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இந்தியாவிலும் தமிழகத்திலும் மத்ரஸாக்களில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலோர் மற்ற உலகக் கல்வி கற்க வசதி இல்லாததாலோ அல்லது நல்லொழுக்கப் பயிற்சிக்காகவோ சேர்கின்றனர். 90% மாணக்கர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்.
மற்ற கல்வி நிறுவனங்களில் அந்தந்த மத
போதனைகளுடன் தற்கால படிப்புகளையும் கற்று கொடுக்கின்றார்கள். ஆனால் மதரஸாக்களில் இஸ்லாமியக் கல்விக்கு கொடுக்கும் முன்னுரிமையை பிற கல்விகளுக்குக் கொடுப்பதில்லை. போட்டி உலகில் முஸ்லிம்கள் பின்தங்கி இருப்பதற்கு, மதரஸாக்களின் கல்வி முறையில் உலகக் கல்வியையையும் மார்க்கக் கல்வியையும் வேறுபடுத்தி பார்த்தது மிகப்பெரும் தவறு.
இது புறமிருக்க, ஆப்கானிஸ்தானில் ரஷ்ய அக்கிரமிப்பிற்கு எதிராக வெகுண்டெழுந்த தாலிபான்கள், ரஷ்யாவையும் அதன் அடிவருடிகளாக இருந்த மன்னர்களையும் ஆப்கான் மண்ணிலிருந்து விரட்டியடித்து ஆக்கிரமிப்புகளாலும், இனச்சண்டைகளாலும் சிதைந்திருந்த ஆப்கானிஸ்தானின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வந்து, “ஓபியம்” (Opium) எனும் போதைப் பொருளின் உற்பத்திக்கூடமாக இருந்த ஆப்கானை, ஒரேயொரு அரசானையின் மூலம் ஒழித்து அமெரிக்கா மற்றும் ஐ.நாவின் பாரட்டைப் பெற்ற தாலிபான்களின் எழுச்சி, மக்களை அடக்குமுறைக்காளாக்கி அரண்மனை சுகம் கண்டவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது.
‘தாலிப்’ (طالب) என்ற அரபுச் சொல்லுக்கு மாணவர்/கற்றுக் கொள்பவர் என்று பொருள். மாணவர்கள் என்பதற்கு இணையான சொல்லாக்கமே தாலிப் அல்லது தாலிபான். தாலிபான்களளில், ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் இயங்கிக் கொண்டிருந்த பஸ்தூன் இனப்போராளிகள் மற்றும் பாகிஸ்தானின் வடமேற்கு மாகானப் போராளிகளும் இருந்தனர். இங்கிலாந்தின் சர்.வின்ஸ்டன் சர்ச்சில் 1897 இல் எழுதிய “Malakand Field Force” என்ற நாவலில் தாலிபான்களை, தாலிவான் என்று குறிப்பிடுகிறார்.
1994 ஆம் ஆண்டுவாக்கில் கந்தஹார் அருகிலுள்ள ஷாங் ஹெசார் கிராமத்திலிருந்த சோதனைச்சாவடியில் Harakat-i Inqilab-i Islami என்ற ஆப்கான் தீவிரவாதக் குழுவினர், சில குடும்பப் பெண்களை கடத்திச்சென்று கற்பழித்ததை, அப்பகுதியின் சாதாரண இமாமாக (ஆலிம்) இருந்த முல்லா உமர் தலைமையிலான மாணவர்கள் காப்பாற்றியதோடு அந்தத் தீவிரவாதிகளை பொதுமக்கள் முன்னிலையில் கொன்றனர்.
இவ்வாறாக ரஷ்யாவின் கைக்கூலியாக இருந்த முந்தைய ஆப்கான் மன்னராட்சி 1992 இல் வீழ்ந்ததும் கடுமையான இனச்சண்டைகளால் சின்னாபின்னமாகி இருந்தது. இந்த சூழலில்தான் தேசபக்தி கொண்ட இஸ்லாமிய கல்வி பயின்ற ஆப்கான் மாணவர்கள் புரட்சிமூலம் அதிகாரத்தையும் மக்கள் செல்வாக்கையும் கைப்பற்றினர்.
ரஷியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பனிப்போர் நடக்கும் வரை ரஷ்யாவை நிம்மதி இழக்கச் செய்ய, இதே தாலிபான்களை அமெரிக்கா ஆயுதம் கொடுத்து கொம்புசீவி ரஷ்யாவை ஆப்கான் மண்ணிலிருந்து விரட்டப் பயன்படுத்தியதும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா என்பது போல அதே தாலிபான்கள் பின்னர் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டதால், அமெரிக்காவின் கோபத்திற்காளாகி இன்று அமெரிக்க கைப்பொம்மை அரசுடன் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறது!!!
இப்படியாக மதரஸா மாணவர்கள், அராஜகத்திற்கெதிராக வெகுண்டெழுந்தது உலக கவனத்தை ஈர்த்ததோடு, இந்த எழுச்சி மற்ற நாடுகளிலும் தலைதூக்கி விடக்கூடாது என
0 கருத்துகள்:
கருத்துரையிடுக